மின் கட்டண உயர்வால் சிரமம்:ஒத்திவைக்க கோரும் 'ஓஸ்மா'

Added : ஆக 07, 2022 | |
Advertisement
கோவை:'தமிழக அரசு புதிய மின் கட்டண உயர்வை அமல்படுத்தினால் தற்போது உள்ள சிரமமான சூழலில் மிகப்பெரிய நஷ்டத்தை ஜவுளித்துறை சந்திக்க நேரிடும்' என, 'ஓஸ்மா' தெரிவித்துள்ளது.ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேசன்(ஓஸ்மா) ஆலோசகர்கள் அனுஷ்ராமசாமி, முருகேசன், தலைவர் அருள்மொழி, செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட ஓப்பன் எண்ட் மில்கள்

கோவை:'தமிழக அரசு புதிய மின் கட்டண உயர்வை அமல்படுத்தினால் தற்போது உள்ள சிரமமான சூழலில் மிகப்பெரிய நஷ்டத்தை ஜவுளித்துறை சந்திக்க நேரிடும்' என, 'ஓஸ்மா' தெரிவித்துள்ளது.ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேசன்(ஓஸ்மா) ஆலோசகர்கள் அனுஷ்ராமசாமி, முருகேசன், தலைவர் அருள்மொழி, செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட ஓப்பன் எண்ட் மில்கள் இயங்குகின்றன. இதில், 70 சதவீத மில்கள் எல்.டி., மற்றும் சி.டி., இணைப்பிலும், 30 சதவீதம் சாதாரண மின் இணைப்பிலும் உள்ளன. எல்.டி. மற்றும் சி.டி., மின் இணைப்பில் உள்ளவர்களுக்கு'டிமாண்ட் சார்ஜ்' கிலோ வாட்டிற்கு, 35 ரூபாயாக இருப்பது, 600 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.அதேபோல், யூனிட்க்கு, 6.35 ரூபாயாக இருப்பது, 7.50 ஆக உயரவுள்ளது. காலை, 6:30 முதல், 10:30 மணி வரையும், மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரையும்(பீக் ஹவர்ஸ் சார்ஜஸ்), 33 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.இதன்படி, தற்போதுள்ள மின் கட்டணத்தை விட யூனிட் ஒன்றுக்கு, 6.78 ரூபாயிலிருந்து, 11.78 ரூபாயாக எல்.டி. மற்றும் சி.டி., இணைப்பு தாரருக்கு உயரும்.அதேபோல், எச்.டி., இணைப்பு தாரருக்கு யூனிட்டு ஒன்றுக்கு, 8.95 ரூபாயிலிருந்து, 11.66 ரூபாயாக கட்டணம் உயரும்.ஏற்கனவே, சர்வதேச அளவில் பருத்தி விலை உயர்வால் ஜவுளித்துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. தமிழக அரசு இந்த மின் கட்டண உயர்வை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தால் மட்டுமே ஜவுளித்துறை உயிர் பிழைக்கும். இல்லையேல், தொழில் பாதித்து பல லட்சம் பேர் வேலை இழப்பர். எனவே, அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X