சர்ச்சை உதவி பேராசிரியருக்குமீண்டும் கோவையில் போஸ்டிங்| Dinamalar

சர்ச்சை உதவி பேராசிரியருக்குமீண்டும் கோவையில் 'போஸ்டிங்'

Added : ஆக 07, 2022 | |
கோவை:பேராசிரியைகளின் புகார் அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட உதவி பேராசிரியர் மீண்டும் கோவையில் பணியமர்த்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவை அரசு கலைக் கல்லுாரியில், 3,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் மீது, கடந்த மே மாதம் சக பெண் பேராசிரியைகள் பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து உதவி

கோவை:பேராசிரியைகளின் புகார் அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட உதவி பேராசிரியர் மீண்டும் கோவையில் பணியமர்த்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவை அரசு கலைக் கல்லுாரியில், 3,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் மீது, கடந்த மே மாதம் சக பெண் பேராசிரியைகள் பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து உதவி பேராசிரியர் ரமேஷ், சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து ரமேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; பின், வழக்கை அவரே வாபஸ் பெற்றார். இந்நிலையில், ரமேஷ் மீண்டும் கோவை தொண்டாமுத்துாரில் உள்ள உறுப்புக்கல்லுாரியில் 'டெபுடேஷன்' பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அச்சங்கத்தின் மாநில தலைவர் வீரமணி கூறுகையில்,''மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் விசாரணை நடத்தி, உதவி பேராசிரியர் ரமேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரை மீண்டும் இங்கு அழைப்பது எந்த நோக்கில் எனத் தெரியவில்லை; பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

திட்டமிட்டே புகார்!
உதவிப்பேராசிரியர் ரமேஷ் கூறுகையில்,''கல்லுாரியில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தியதன் காரணமாகவே, இப்புகாரில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். என் மீது திட்டமிட்டே இப்புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதனடிப்படையிலேயே எனக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சங்கத்தில் என்னுடைய வளர்ச்சியை பொருத்துக் கொள்ள முடியாமல் என் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆதாரமற்ற புகார் இது,'' என்றார்.

மாற்றப்படுவார்!

சென்னை கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில்,''உதவி பேராசிரியர் ரமேஷ் தொண்டாமுத்துாரில் டெபுடேஷனில் தான் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஒரு வார காலத்துக்குள் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளார்,'' என்றார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X