இது உங்கள் இடம்: கொள்கை கூட்டணி அல்ல; கொள்ளை கூட்டணி!

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (75) | |
Advertisement
உலகம், நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது, கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி' என்று பேசி பெருமிதம் அடைந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.இந்திரா பிரதமராக இருந்த போது, 1976ல் எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். அதை எதிர்த்து முன்னாள்
கொள்கை கூட்டணி, கொள்ளை கூட்டணி, தி.மு.க., காங்கிரஸ், ஸ்டாலின்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneஉலகம், நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது, கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி' என்று பேசி பெருமிதம் அடைந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.


இந்திரா பிரதமராக இருந்த போது, 1976ல் எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் காமராஜர், காங்கிரசை விட்டு வெளியேறினார். தி.மு.க.,வில் ஸ்டாலின் உட்பட பலரும் அடக்குமுறைக்கு ஆளாகினர். இருந்தாலும், அதை எல்லாம் மறந்து, எம்.ஜி.ஆர்., ஆட்சியை கலைப்பதற்காக, 1980ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார் கருணாநிதி. 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியை தருக' என்ற கோஷத்தோடு பிரசாரமும் செய்தார்.


latest tamil newsஅதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆரை தோல்வி அடையச் செய்வதற்காக, மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், சரிபாதி இடங்களை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து, மீதி பாதி இடங்களில் தி.மு.க., போட்டியிட்டும் தோல்வி அடைந்தது.

பின், 1989ல் காங்கிரசுக்கு, 'குட்பை' சொல்லி விட்டு, அக்கட்சிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தேசிய முன்னணியில், வி.பி.சிங்கின் தலைமையை ஏற்றார் கருணாநிதி. 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் வாஜ்பாயுடன் கூட்டணி அமைத்து, மிகப் பெரிய வெற்றி கண்டார்; மத்திய அரசிலும் தி.மு.க, கோலோச்சியது.


latest tamil newsபின், பா.ஜ.,வுக்கு குட்பை சொல்லி விட்டு, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கூட்டணி அமைத்தார் கருணாநிதி. அந்தக் கூட்டணி தான், இன்று வரை நீடிக்கிறது. ஜூலை 27ல், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடான, 'முரசொலி' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றிய வாசகம் இடம் பெற்றிருந்தது.

அதில், 'தமிழகத்தை பாதித்திருந்த புற்றுநோயை நீக்க பாடுபட்ட அண்ணாதுரை, தன் இதயத்தை பாதித்திருந்த புற்றுநோயை அகற்ற மறந்திருந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 1967ல் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியதை தான், தமிழகத்தை பாதித்த புற்று நோயை நீக்க பாடுபட்டார் அண்ணாதுரை என்று, கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதனால், வரும் 2024 லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் - தி.மு.க., இடையேயான கொள்கை கூட்டணி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது, அந்த நேரத்தில் தெரிந்து விடும்.

காலத்துக்கு ஏற்றபடி கூட்டணி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது, தி.மு.க.,வின் அரசியல் வரலாற்றில் சகஜமானது. அதனால், கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும் தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது என்று ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக உள்ளது. மொத்தத்தில் தி.மு.க.,வின் கூட்டணி, கொள்கை கூட்டணி என்பதை விட, கொள்ளை கூட்டணி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
07-ஆக-202218:33:46 IST Report Abuse
DVRR கொள்கை கூட்டணி என்று ஏதுமேயில்லை கொள்ளை கூட்டணி தான் உண்மையானது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-ஆக-202218:33:29 IST Report Abuse
sankaseshan கொள்ளை அடிப்பது நீ அடிமை சேவகம் பண்ணும் திருட்டு கட்சிக்கே உரியது
Rate this:
Cancel
07-ஆக-202218:00:22 IST Report Abuse
Elamathivanan Era திமுக என்றால் சந்தபவாதிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X