பெண்ணை கொன்று துாக்கில் தொங்கவிட்ட 3 பேர் கைது

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் பெண்ணை கொன்று, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகைகளை கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன், 65. இவரது மனைவி முத்துலட்சுமி, 60. இரு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. கோபாலன், குமார் நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இரு தளம் கொண்ட கட்டடத்தில், 9 வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு,
பெண்ணை கொன்று துாக்கில் தொங்கவிட்ட 3 பேர் கைது

திருப்பூர்:திருப்பூரில் பெண்ணை கொன்று, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகைகளை கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன், 65. இவரது மனைவி முத்துலட்சுமி, 60. இரு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. கோபாலன், குமார் நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இரு தளம் கொண்ட கட்டடத்தில், 9 வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, தரைத்தளத்தில் தம்பதி வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, கோபாலன் வீட்டுக்கு சென்ற போது, முத்துலட்சுமி வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பீரோவில் இருந்த, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 'சிசிடிவி' கேமரா பதிவில், சந்தேகப்படும் விதமான டூவீலரின் எண்ணை கொண்டு விசாரித்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் லாட்ஜில் தங்கியிருந்த, கரூரை சேர்ந்த அருண், 24, தஞ்சாவூரை சேர்ந்த அமரன், 23, ஈரோட்டை சேர்ந்த தினேஷ், 24 ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து, 9.82 லட்சம் ரூபாய், 42 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.போலீசார் கூறியதாவது:கைதான மூவரும் எலக்ட்ரீசியன்கள். கடந்த, 30ம் தேதி கோபாலன் வீட்டுக்கு 'பிளம்பிங்' வேலை செய்ய அருண் சென்றார். வீட்டில் தம்பதி மட்டுமே இருப்பதையும், பணப்புழக்கம் இருப்பதையும் தெரிந்து கொண்டார். அமரனையும், தினேஷையும் அருண் சந்தித்து, கோபாலன் வீட்டில் கொள்ளையடிப்பது தொடர்பாக திட்டமிட்டார். வேறொரு நண்பரிடம், டூவீலரை வாங்கி கொண்டு, மூவரும் கோபாலன் வீட்டுக்கு சென்றனர்.முத்துலட்சுமியை சந்தித்து, பிளம்பிங் உட்பட சில பணிகளை, முழுமையாக இன்னும் முடிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதை நம்பிய, முத்துலட்சுமி வீட்டுக்குள் அழைத்து சென்றார். உள்ளே சென்றவுடன் அவரது கழுத்தை நெரித்து கொன்று, அறையில் துாக்கில் தொங்க விட்டனர். பணம், நகையை கொள்ளையடித்து விட்டு, கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடி துாவி சென்றனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

ரூ.18 ஆயிரம் காலி

காட்டி கொடுத்தால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று நினைத்து முத்துலட்சுமியை கொலை செய்ததாக போலீசாரிடம் மூவரும் தெரிவித்தனர். மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த இவர்கள், 20 நிமிடத்தில் வெளியேறினர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில், அன்றிரவு, புதிய ஆடைகளை எடுத்தனர். பெரிய ஹோட்டல் ஒன்றில், மது அருந்தி, 18 ஆயிரம் ரூபாயை ஜாலியாக செலவு செய்தனர். கொடுமுடியில் அறை எடுத்து தங்கிய மூவர் மறுநாள் தப்பி செல்ல இருந்த நிலையில், அதிகாலை, 2:30 மணியளவில் போலீசாரிடம் சிக்கி கொண்டனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X