கணியாமூர் பள்ளி மாணவர்களுக்குசான்றிதழ் வழங்கும் பணி தீவிரம்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி:கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்களை, கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குழுவினரிடம் பெற்றோர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 2,348, சி.பி.எஸ்.இ., பள்ளியில் 400 மாணவ, மாணவியர் என மொத்தம், 2,748 பேர் படிக்கின்றனர்.இங்கு விடுதியில் தங்கி பிளஸ் 2

கள்ளக்குறிச்சி:கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்களை, கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குழுவினரிடம் பெற்றோர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 2,348, சி.பி.எஸ்.இ., பள்ளியில் 400 மாணவ, மாணவியர் என மொத்தம், 2,748 பேர் படிக்கின்றனர்.இங்கு விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ம் தேதி அதிகாலை தரை தளத்தில் இறந்து கிடந்தார். அதைத் தொடர்ந்து 17ல் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.இதில், வாகனங்கள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.எரிந்த சான்றிதழுக்கு மாற்று சான்றிதழ் வழங்க கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராஜு மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.மேலும், கலெக்டர் அலுவலகத்தில் சான்றிதழ் நகலைப் பெற துவங்கப்பட்டுள்ள முகாமில், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சான்றிதழ் நகல்களை வழங்கி வருகின்றனர்.மெட்ரிக் பள்ளியில் பயிலும் 1,700, சி.பி.எஸ்.இ., பயிலும் 300 மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்கள் மற்றும் விபரங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.அனைத்து மாணவர்களின் சான்றிதழ் நகல், தகவல் பெறப்பட்டதும் கலெக்டர் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு தேவைப்படும் சான்றிதழ்களின் விபரங்கள் அனுப்பி, உடனடியாக புதிய சான்றிதழ் பெறப்பட்டு பெற்றோர்களிடம் வழங்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X