மாநில செஸ் போட்டியில் மேலூர் மாணவி 3ம் இடம்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
மேலுார் : சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேலுார் மாணவி சோலையம்மாள் 3ம் இடம் பெற்றார்.ஏற்கனவே மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற அ.வல்லாளப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் பிரதீப், தேவ்நாத், கலைச்செல்வி ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களை அழைத்து வந்து
மாநில செஸ் போட்டியில்  மேலூர் மாணவி 3ம் இடம்


மேலுார் : சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேலுார் மாணவி சோலையம்மாள் 3ம் இடம் பெற்றார்.ஏற்கனவே மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற அ.வல்லாளப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் பிரதீப், தேவ்நாத், கலைச்செல்வி ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களை அழைத்து வந்து அறிமுகம் செய்யும் வாய்ப்பும், போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பும் பெற்றனர்.

செஸ் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல், 2ம் இடம் பெற்ற 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாநில போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் ஆறு சுற்றுகளாக போட்டி நடந்தது. இதில் மேலுார் அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி சோலையம்மாள் ஐந்து சுற்றுகளில் வெற்றி பெற்று 3ம் இடம் பெற்றார்.

பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், என்.எஸ்.எஸ். இணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் மாணவிக்கு பதக்கம், சான்றிதழ், ரூ.3000 பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற மாணவியை சி.இ.ஓ., கார்த்திகா, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், மேலுார் கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் மீனா, குளோரி, தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், பயிற்சியாளர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.




சோழவந்தான்




நாச்சிகுளம் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி தனப்ரியா. இவர் இத்துறை பள்ளிகளுக்கு இடையே நடந்த மாநில செஸ் போட்டியில் முதலிடம் பிடித்தார். சென்னையில் நடக்கும் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை புஷ்பம், உடற்கல்வி ஆசிரியர்கள் மூர்த்தி, ஜேசு ராஜேஷ் மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X