மனநலம் பாதித்த மகளை கொன்ற தம்பதிக்கு 'ஆயுள்'

Added : ஆக 07, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:மனநலம் பாதிக்கப்பட்ட, 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், 45. இவரது மனைவி ரேவதி, 38; இன்ஜினியரிங் பட்டதாரியான இத்தம்பதிக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட, 9 வயது பெண்

ஸ்ரீவில்லிபுத்துார்:மனநலம் பாதிக்கப்பட்ட, 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், 45. இவரது மனைவி ரேவதி, 38; இன்ஜினியரிங் பட்டதாரியான இத்தம்பதிக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட, 9 வயது பெண் குழந்தை இருந்தது.கடந்த, 2018 அக்.,1ல் மகளுடன் தம்பதியர் ஸ்ரீவில்லிபுத்துார் நாகபாளையத்தில் உள்ள காத்தப்பசாமி குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சுவாமி கும்பிட்ட பின், இருவரும் நீண்ட நேரம் கோவில் பின்புறம் உட்கார்ந்திருந்தனர்.சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, கோவில் பொறுப்பாளர் காளிமுத்து அங்கு சென்று பார்த்தபோது, தங்கள் மடியில் சிறுமியை படுக்க வைத்து, வாயில் ஒரு திரவத்தை ஊற்றியுள்ளனர். காளிமுத்து அதனை தட்டி விட்டார். அது விஷம் என்பது தெரிய வந்தது. சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். முனீஸ்வரன், ரேவதி மீது மல்லி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X