எருதுகட்டு விழா| Dinamalar

எருதுகட்டு விழா

Added : ஆக 07, 2022 | |
பாலமேடு : பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார், கருப்புச்சாமி கோயில் உற்ஸவ ஆடித் திருவிழா ஜூலை 29ல் துவங்கியது. ஆக.,5 மாலை மறவர்பட்டியில் இருந்து சுவாமிகளின் பட்டத்து குதிரை, பரிவார தெய்வங்களை கண் திறக்கும் பீடத்திற்கு அழைத்து வந்தனர்.பின் நகை பெட்டி எடுத்து, தீவட்டி அலங்காரத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு மஞ்சமலை
எருதுகட்டு விழா



பாலமேடு : பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார், கருப்புச்சாமி கோயில் உற்ஸவ ஆடித் திருவிழா ஜூலை 29ல் துவங்கியது. ஆக.,5 மாலை மறவர்பட்டியில் இருந்து சுவாமிகளின் பட்டத்து குதிரை, பரிவார தெய்வங்களை கண் திறக்கும் பீடத்திற்கு அழைத்து வந்தனர்.

பின் நகை பெட்டி எடுத்து, தீவட்டி அலங்காரத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு மஞ்சமலை ஆற்றில் வாடிவாசல் முன் கிராம காளைகளை வடத்தில் பூட்டி மரியாதை செய்து, எருது கட்டு விழா நடந்தது.இதில் மஞ்சமலை சுவாமி காளை உட்பட 19 காளைகள் பங்கேற்றன. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்தனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இவ்விழா கொரோனா ஊரடங்கால் 5 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X