சாயப்பட்டறைக்கு சீல்

Added : ஆக 07, 2022 | |
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டியில் அனுமதி இன்றி சாயப்பட்டறை இயங்குவதாக வந்த தகவலை அடுத்து தாசில்தார் சிவராமன் தலைமையில் வருவாய் துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது புதுப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து அரசின் அனுமதியின்றி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய சான்று பெறாமல் தேனியை சேர்ந்த செந்தில்



திருமங்கலம் : திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டியில் அனுமதி இன்றி சாயப்பட்டறை இயங்குவதாக வந்த தகவலை அடுத்து தாசில்தார் சிவராமன் தலைமையில் வருவாய் துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது புதுப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து அரசின் அனுமதியின்றி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய சான்று பெறாமல் தேனியை சேர்ந்த செந்தில் என்பவர் சாயப்பட்டறை நடத்தியது தெரிந்தது.

இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் வேலை செய்து வந்தனர். சாயப்பட்டறையில் இருந்து கழிவு நீரை விவசாய பகுதிகளில் வெளியேற்றுவதால் விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின. வருவாய் துறையினர் சாயப்பட்டறைக்கு சீல் வைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X