பாலிலும், கவரிலும் ஊழல்: அண்ணாமலை திட்டவட்டம்

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை : ''பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,'' என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு பாத யாத்திரை நேற்று நடந்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரையில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.பின், செய்தியாளர்களிடம்,
பால், கவர், ஊழல் அண்ணாமலை, ஆவின்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ''பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,'' என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு பாத யாத்திரை நேற்று நடந்தது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரையில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.பின், செய்தியாளர்களிடம், அண்ணாமலை கூறியதாவது:தேசிய கொடி ஏந்தி மக்கள் எழுச்சியுடன் இந்த பேரணி நடந்துள்ளது.


latest tamil newsதமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே, தேசப்பற்று குறித்த போட்டிகள் பா.ஜ., சார்பில் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில், பொதுமக்களும், தி.மு.க.,வினரும் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அழைப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.தமிழகத்தில் பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்துள்ளதாக நான் மட்டும் சொல்லவில்லை;


latest tamil news


ஆவினில் பணியாற்றுகின்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் கூறுகின்றனர். ஆவின் பால் பாக்கெட் வாங்கி, எடை போட்டு பார்த்தால், 500 மில்லி இருக்க வேண்டிய எடையில் 430 மில்லி தான் இருக்கிறது. இது ஊரறிந்த உண்மை.பால்வளத்துறை அமைச்சர் நாசர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கும் சூழலில், அந்த பதவியில் நீடிப்பது அழகா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram -  ( Posted via: Dinamalar Android App )
07-ஆக-202216:42:24 IST Report Abuse
ram அண்ணாமலையாரே... திராவிட கட்சிகளுக்கு ஊழல் செய்வதிலே கைதேர்ந்தவங்க.. இவங்களுக்கு ஊழல் செய்து சொத்து சேர்ப்பதைத் தவிற இவங்களுக்கே வேற எதுவுமே தெரியாது.. இவங்க ஆட்சியைப் பிடிப்பதே கோடி கோடியா சம்பாதிக்குறதுக்குத் தான். அந்த எண்ணத்தாலேதான் கோடிக்கணக்குலே வாரி இறைத்து தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதே.. சம்பாதித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை செயலும் அப்படியேதானே இருக்கும். இப்படி சம்பாதிக்கும் எண்ணத்தோடு வருபவன் எப்படி மக்களுக்கு செலவு செய்யத்தோனும். இதனை மக்கள் என்றைக்கு புறிஞ்சுக்குறாங்களோ. அன்றைக்கு இவங்களுக்கு இங்கே இடமில்லை.
Rate this:
Cancel
கஜகரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா
07-ஆக-202212:23:28 IST Report Abuse
கஜகரன் இவர் தினம் பணம் கொடுத்து பேட்டி என்கிற பேரில் தினம் போட்டோ பேப்பர் இல் வரவைக்கிறார் இதுவே இவருக்கு MINUS ஆக போகிறது, உண்மையில் ஊழல் என்றால் கூட மக்கள் இவர் சொல்லுவதை நம்பாமல் போகும் நிலை வரப்போகுது
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
07-ஆக-202212:21:49 IST Report Abuse
Dhurvesh அது சரி, உங்கள் ஆட்டுக்குட்டியும் தினமும் இவர் ஊழல் செய்தார் அவர் ஊழல் செய்தார் என்று அளக்கிறாரே, அவரிடம் ஆதாரத்தை கேட்டால் மட்டும் அவர்கள் வேண்டுமானால் மான நஷ்ட ஈடு வழக்கு போடணுமாம், கடைசி வரை ஆதாரம் எதுவும் தராமல் வாயாலே வடை சுடுவது. எண்ணங்கப்பா நியாயம் இதெல்லாம், உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஆக-202214:00:10 IST Report Abuse
Kasimani Baskaranஅனைத்து ஊழல்களும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் புகாராக சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் புகாராக கொடுக்கப்பட்டு இருக்கிறது. திராவிட மாடலில் வெறுமனே திராவிட திருட்டு மாடலில் உருட்டுவது அறிவீனம். முடிந்தால் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லுங்கள். இல்லை என்றால் ஆதாரம் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சொல்லட்டும் - நீதிமன்றம் போகவும் பாஜக தயாராக இருக்கிறது. ஏற்கனவே கவர்னரிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X