கோவில் நிதியை இதர பயன்பாட்டிற்கு செலவிட கூடாது: ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள்

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
தஞ்சாவூர் : ''கோவில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது,'' என, அகில பாரத ஹிந்து மகாசபா பொதுச்செயலர் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பல்வேறு கோவில்களில் நேற்று தரிசனம் செய்த அவர் கூறியதாவது:கோவில்களின் நிலை, நிர்வாகம், சுவாமிகளுக்கு நடக்கும் பூஜைகள் குறித்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோவில்களை
கோவில் நிதி, ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள், அகில பாரத, ஹிந்து மகாசபா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


தஞ்சாவூர் : ''கோவில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது,'' என, அகில பாரத ஹிந்து மகாசபா பொதுச்செயலர் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பல்வேறு கோவில்களில் நேற்று தரிசனம் செய்த அவர் கூறியதாவது:

கோவில்களின் நிலை, நிர்வாகம், சுவாமிகளுக்கு நடக்கும் பூஜைகள் குறித்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோவில்களை பார்வையிட்ட நிலையில், தமிழக கோவில்களை பார்வையிட்டு வருகிறேன்.கோவில்களில் நான்கு வேதங்கள், நாலாயிரம் திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் படிப்பதுக்கு ஓதுவார்கள் இல்லை. கோவில் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க வேண்டும்.


latest tamil news


இத்தகைய செலவுகளுக்கு கோவில் வருமானம், நகைகள், சொத்துக்கள் கொண்டு செலவு செய்ய வேண்டும். கோவில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். கோவில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது.அந்தந்த பகுதி ஹிந்துக்கள், அங்குள்ள கோவில்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில், 70 ஆண்டுகளாக ஹிந்து விரோத அரசு நடந்து வருகிறது. பலவிதமான இடையூறுகள் செய்து வருகின்றனர்.

கோவில்களில் பூஜைகள் சரியாக நடப்பதில்லை.கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, ஹிந்து இளைஞர்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மூன்று மாநில கோவில்களின் நிலைகள், தேவையான வசதிகள் குறித்து அறிக்கையாக தயார் செய்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அந்தந்த மாநில முதல்வர்கள், அறநிலையத்துறை அமைச்சர்களிடம் விரைவில் வழங்க உள்ளோம்.

அதன் அடிப்படையில் மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சட்டப் போராட்டத்தை துவங்குவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஆக-202213:57:57 IST Report Abuse
Vena Suna அருமை அருமை. ஆனால் முதல்ல நல்ல தான் இருந்தது இங்கே. 1967 இல் அண்ணாதுரை அவர்கள் வந்தது முதல் தமிழ்நாடு காலி. நடுவில் மக்கள் திலகம் ஆட்சி பரவாயில்லை. ஆனால் அவர் 7 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்குள் உடல் நலம் கெட்டு போனார். ஆனாலும் அவர் ஆட்சியில் ஆர்.எம்.வீரப்பன் நன்றாக சமாளித்தார் .பிறகு நாசம் தான். கருணாநிதியும்,அம்மாவும் ஒரே மாதிரி தான்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
07-ஆக-202212:58:40 IST Report Abuse
mindum vasantham சர்ச்களை அறநிலைத்துறை கீழ் கொண்டு வருமா ட்ரடியா அரசு
Rate this:
Cancel
Shankar - Hawally,குவைத்
07-ஆக-202212:18:52 IST Report Abuse
Shankar தமிழக அரசு இயங்குறதே கோயில் வருமானத்தில், சாராய வருமானத்தில் தான். இது ஊரறிந்த விஷயம்.
Rate this:
Suri - Chennai,இந்தியா
07-ஆக-202213:07:33 IST Report Abuse
Suriசாராய வருமானம் ஓகே... ஆனால் கோவில் வருமானம்.. அது தவறு இந்த அரசு... குறிப்பா ....கோவிலை வைத்து சம்பாதித்து கெட்ட பெயர் வாங்க முயற்சிக்காது. ஏனெனில்...ஒட்டுமொத்தமாக காலி செய்ய ஒரு பெரிய கூட்டம் தயாரா இருக்கு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X