மலேசியா தப்பியவர் எங்கே ராமநாதபுரம் போலீசார் விசாரணை

Added : ஆக 07, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு அடுத்த நாளே மலேசியா தப்பிய வாலிபரை கைது செய்ய அவர் இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில்போலீசார் ஈடுபட்டுஉள்ளனர்.தேவிப்பட்டினம் அருகே சிங்கனேந்தல் குப்பு மகன் பிச்சைக்கனி43. மலேசியாவில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்த இவர் மே மாதம் ஊர் திரும்பினார். இவரை மனைவி சாந்தி 36. கச்சான் கிராமத்தை சேர்ந்த



ராமநாதபுரம் : கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு அடுத்த நாளே மலேசியா தப்பிய வாலிபரை கைது செய்ய அவர் இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில்போலீசார் ஈடுபட்டுஉள்ளனர்.தேவிப்பட்டினம் அருகே சிங்கனேந்தல் குப்பு மகன் பிச்சைக்கனி43. மலேசியாவில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்த இவர் மே மாதம் ஊர் திரும்பினார்.

இவரை மனைவி சாந்தி 36. கச்சான் கிராமத்தை சேர்ந்த கள்ளக்காதலர்கள் கலைமோகன் 29, அவரதுதம்பி பார்த்திபன் 26, ஆகியோருடன் சேர்ந்து மே 28ல் மது வாங்கி கொடுத்து பிச்சைக்கனியை கொலை செய்து உடலை சீமைக்கருவேல புதருக்குள் வீசினர்.இந்த நிலையில், கணவரை காணவில்லை, என சாந்தி தேவிப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். ஜூலை 23ல்பிச்சைக்கனி உடல் அரசலுார் காட்டுப்பகுதியில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது. சாந்தியின் அலைபேசி உரையாடல்களை சேகரித்த போலீசார் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து, கள்ளக்காதலன் கலைமோகன் கைது செய்யப்பட்டார். இவரது தம்பி பார்த்திபன்கொலை செய்வதற்காகவே மலேசியாவில் இருந்து மே 25ல் ஊருக்கு வந்தவர் கொலை செய்த அடுத்த நாள் சென்னையில் இருந்து மலேசியா தப்பி சென்றார். தலைமறைவான சாந்தி பெங்களூரு செல்வதற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார். மலேசியா சென்ற பார்த்திபனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், பார்த்திபன் மலேசியாவில் எங்கே இருக்கிறார் என்ற விவரம்சேகரிக்கப்படுகிறது. மலேசிய போலீஸ் உதவியுடன் அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X