அமைச்சர் கார் செல்ல காத்திருந்த ஆம்புலன்ஸ்: சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
தஞ்சாவூர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்த போது, ஆம்புலன்ஸ்சை போலீசார் காக்க வைத்த சம்பவத்திற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில், , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள், கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர். திருவிடைமருதுார் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஆய்வு
Minister, car, ambulance

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்த போது, ஆம்புலன்ஸ்சை போலீசார் காக்க வைத்த சம்பவத்திற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள், கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர். திருவிடைமருதுார் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஆய்வு செய்ய, அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அணிவகுத்தன.

அப்போது, பாலத்தின் மறு பக்கத்தில், அமைச்சர் கார் செல்லும் வரை, போலீசாரால் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சென்ற பிறகே, நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது.


latest tamil news
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அமைச்சர் வாகனத்திற்காக, பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் நிறுத்தியது கண்டனத்திற்குரியது. ஆம்புலன்ஸ்சில் நோயாளி இருந்தாலும், இல்லா விட்டாலும் அவரசமாக சைரன் ஒலித்தால், உடனே போக்குவரத்தை சரி செய்து, ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட வேண்டும் என்பது தான் விதி. இது கூட தெரியாமல் போலீசார் இருந்துள்ளனர். ஒரு வேளை ஆம்புலன்ஸ்சில் இருந்தவர்கள் இறந்திருந்தால் யார் பொறுப்பேற்பது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
07-ஆக-202219:24:16 IST Report Abuse
DVRR கலவி அமைச்சர் தானே அப்போ சரி தான் இது தான் திருட்டு திராவிட மாடல் என்பது
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஆக-202218:32:35 IST Report Abuse
Sriram V Useless minister, worst administrator, just surviving because fri of CM son. Vidiyal Arasin sathanai
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
07-ஆக-202216:40:24 IST Report Abuse
M S RAGHUNATHAN 1960 களில் திருச்சி தெப்பக்குளம் வடகரையில் ஒரு வீட்டிற்க்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது பற்றி நிறைய விமர்சனம் உண்டு. அந்த காலத்தில் St Joseph கல்லூரியில் படித்த (அதுவும் கிளைவ் விடுதியில்) படித்த மாணவர்களை கேட்டால் விவரம் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X