பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 26 சதவீதம் உயர்வு

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2022-23ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 25.54 சதவீதம் அதிகரித்து, 1.15 பில்லியன் அமெரிக்க டாலராக
Basmathi, Rice,export, increase, Commerce Ministry, பாஸ்மதி அரிசி, ஏற்றுமதி, உயர்வு, வர்த்தக அமைச்சகம், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்


நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.



மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2022-23ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 25.54 சதவீதம் அதிகரித்து, 1.15 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 922 மில்லியனாக இருந்தது. மேலும் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டி, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்து, 1.56 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


முதல் காலாண்டில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியும் 31 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 7.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில், ஏற்றுமதி இலக்கு 23.56 பில்லியன் டாலராக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ளது.


latest tamil news



இதுதவிர, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
இறைச்சி, பால்பொருட்கள் மற்றும் முட்டை உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 9.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பால் பொருட்கள் ஏற்றுமதி மட்டும் 67.15 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் மதிப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 191 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு பங்குதாரர்களுடன் இணைந்து தேவையான சூழலை உருவாக்கினால், ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள நீடித்த வளர்ச்சியை, நடப்பு நிதியாண்டு முழுவதும் தொடர இலக்கு நிர்ணயித்துள்ளதாக வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் தலைவர் அங்கமுத்து தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-ஆக-202217:41:17 IST Report Abuse
Kasimani Baskaran குறைவான கிளைசிமிக் இண்டெஃஸ் இருப்பதால் வெளிநாடுகளில் பாஸ்மதி அரிசிக்கு தேவை அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X