குஜராத்தில் இலவச மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி: கெஜ்ரிவால் வாக்குறுதி| Dinamalar

குஜராத்தில் இலவச மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி: கெஜ்ரிவால் வாக்குறுதி

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (45) | |
ஆமதாபாத்: குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரமும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.குஜராத் வந்துள்ள கெஜ்ரிவால் கூறியதாவது: மின்சாரம் தொடர்பாக முதல் வாக்குறுதி அளிக்கிறோம். மக்கள் துயரத்தில் உள்ளனர். மின்கட்டணமும் அதிகமாக உள்ளது.
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால், குஜராத், gujarat

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரமும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



குஜராத் வந்துள்ள கெஜ்ரிவால் கூறியதாவது: மின்சாரம் தொடர்பாக முதல் வாக்குறுதி அளிக்கிறோம். மக்கள் துயரத்தில் உள்ளனர். மின்கட்டணமும் அதிகமாக உள்ளது. டில்லியில் இலவச மின்சாரம் அளித்து வருகிறோம். பஞ்சாபில், 25 லட்சம் வீடுகளுக்கு மின்சார கட்டணம் ஏதும் வரவில்லை. விரைவில் 51 லட்சம் வீடுகளுக்கு மின்சார கட்டணம் பூஜியம் என்ற நிலை ஏற்படுத்தப்படும். 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், முந்தைய மின்சார கட்டணமும் ரத்து செய்யப்படும். ஆட்சி அமைத்த 3 மாதத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும்.



latest tamil news


இங்குள்ள இளைஞர்கள் வாழ்வாதாரத்தை தொடர சிரமப்படுகின்றனர். சில ஆண்டுகளில் டில்லியில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தோம். இங்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். அதுவரை வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர திட்டமும் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் டில்லியில் உள்ளது போன்ற பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X