5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Added : ஆக 07, 2022 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வலேி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு,
Weather, Rain, IMD chennai, Tamilnadu, மிதமான மழை, வானிலை மையம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வலேி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று(ஆக.,7) மற்றும் வரும் ஆக., 8, 9, 10, 11 ஆகிய 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



latest tamil news


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைக்குடா, தென் மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


அதே போல் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்இப்பகுதிகளில் மீனவர்கள் இன்று (ஆக.,7)யும், வரும் ஆக.,8,9 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X