2,300 கிலோ ரேஷன் அரிசியை குருணையாக்கி கடத்த முயற்சி

Added : ஆக 07, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை அருகே 2,300 கிலோ ரேஷன் அரிசியை, குருணையாக அரைத்து வெளியூருக்கு அனுப்ப பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நேற்று அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெய்வாசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 52. இவரது குடோனில் ரேஷன் அரிசியை, குருணையாக அரைத்து வெளியூர்களுக்கு விற்பனை செய்து வருவதாக, திருமயம் வட்ட வழங்கல் அலுவலர்
2,300 கிலோ ரேஷன் அரிசியை குருணையாக்கி கடத்த முயற்சி

புதுக்கோட்டை அருகே 2,300 கிலோ ரேஷன் அரிசியை, குருணையாக அரைத்து வெளியூருக்கு அனுப்ப பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நேற்று அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெய்வாசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 52. இவரது குடோனில் ரேஷன் அரிசியை, குருணையாக அரைத்து வெளியூர்களுக்கு விற்பனை செய்து வருவதாக, திருமயம் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.தகவலின்படி நேற்று அந்த குடோனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, குருணையாக 1,000 கிலோ, பழுப்பு கலந்த அரிசியாக 1,000 கிலோ, ரேஷன் அரிசி 300 கிலோ என, மொத்தம் 2,300 கிலோ அரிசியைக் கைப்பற்றி, புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அரிசியை பறிமுதல் செய்து, பழனியப்பனிடம் விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X