தண்டராம்பட்டு அருகே, பொக்லைன் இயந்திரம் சாய்ந்து டிரைவர் பலியானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைபட்டைச் சேர்ந்தவர் சந்தோணிபாய், 40; பொக்லைன் இயந்திர டிரைவர். இவர், திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் சமத்துவபுரம் அருகே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, இயந்திரம் பழுதானது. இதை சீரமைக்க, ஜாக்கியால் பொக்லைன் வாகனத்தை மேலே துாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது, அவர் தலை மீது பொக்லைன் இயந்திரம் சாய்ந்து, சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார். வாணாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.