வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.,9) இதன் நிறைவு விழா நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பிடே (FIDE) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகளும், எதிராக 16 ஓட்டுகளும் கிடைத்தன. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.