செஞ்சி அரசு மேல்நிலை பள்ளியில் 1.84 கோடி ரூபாய் மதிப்பில் 3,726 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளியில், செஞ்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் 29 பள்ளிகளைச் சேர்ந்த 1884 மாணவர்கள், 1842 மாணவிகள் என 3,726 பேருக்கு 1.84 கோடி ரூபாய் மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா வரவேற்றார். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர்கள் செஞ்சி மொக்தியார் அலி, அனந்தபுரம் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சுப்ராயன், பள்ளி ஆய்வாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, நெடுஞ்செழியன், துரை, சுப்ரமணியன், தலைமை ஆசிரியர்கள் கணபதி, விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மாணிக்கம் திலகவதி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.