2024-ல் மீண்டும் பிரதமராக வேண்டும் : பிரதமருக்கு ரக்ஷா வாழ்த்து தெரிவித்தார் பாக்.,சகோதரி| Dinamalar

2024-ல் மீண்டும் பிரதமராக வேண்டும் : பிரதமருக்கு ரக்ஷா வாழ்த்து தெரிவித்தார் பாக்.,சகோதரி

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (2) | |
புதுடில்லி: ரக் ஷா பந்தன் விழாவை முன்னிட்டு பிரதமருக்கு ரக் ஷா கயிறை அனுப்பி வைத்து வரும் 2024-ம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரக் ஷா பந்தன் விழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பாகிஸ்தானின் சகோதரியான கமர் மொஹ்சின்ஷேக் ஒவ்வொரு ஆண்டும் ரக் ஷா பந்தன் விழாவின் போது

புதுடில்லி: ரக் ஷா பந்தன் விழாவை முன்னிட்டு பிரதமருக்கு ரக் ஷா கயிறை அனுப்பி வைத்து வரும் 2024-ம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.



latest tamil news



ஒவ்வொரு ஆண்டும் ரக் ஷா பந்தன் விழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பாகிஸ்தானின் சகோதரியான கமர் மொஹ்சின்ஷேக் ஒவ்வொரு ஆண்டும் ரக் ஷா பந்தன் விழாவின் போது அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வைப்பது வழக்கம். இந்தாண்டும் இது போன்ற வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: இந்த ஆண்டு அவர் என்னை டில்லிக்கு அழைப்பார் என்று நம்புகிறேன். இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளேன். எம்பிராய்டரி டிசைனுடன் கூடிய ரேஷ்மி ரிப்பனை பயன்படுத்தி ராக்கி கயிறை உருவாக்கி உள்ளேன். 2024-ல் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என பிரார்த்தப்பதாக வேண்டுகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.


latest tamil news



மேலும் அவர் கூறுகையில் 2024 ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் மீண்டும் பிரதமராக வருவார். அதில்எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்கான தகுதிகள், திறன்கள் அவரிடம் உள்ளன. அவர் ஒவ்வொரு தேர்தலிலும் வென்று பிரதமராக நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X