திமுக ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது: அர்ஜூன் சம்பத் | Dinamalar

திமுக ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது: அர்ஜூன் சம்பத்

Added : ஆக 07, 2022 | கருத்துகள் (1) | |
மயிலாடுதுறை:ஓராண்டு கால திமுக ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.சுதந்திர பவள விழா ஆண்டை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும், வந்தே மாதரம் யாத்திரை மயிலாடுதுறை மாவட்ட சீர்காழிக்கு வந்தது. எருக்கூர்,சீர்காழி, பகுதிகளில் நடைபெற்ற யாத்திரை நிகழ்வுகளில் அர்ஜூன் சம்பத்
 திமுக ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது: அர்ஜூன் சம்பத்

மயிலாடுதுறை:ஓராண்டு கால திமுக ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.



சுதந்திர பவள விழா ஆண்டை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும், வந்தே மாதரம் யாத்திரை மயிலாடுதுறை மாவட்ட சீர்காழிக்கு வந்தது. எருக்கூர்,சீர்காழி, பகுதிகளில் நடைபெற்ற யாத்திரை நிகழ்வுகளில் அர்ஜூன் சம்பத் பங்கேற்றுப் பேசினார்.


பின்னர் சீர்காழியில் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது: சமூக ஊடகங்களில் தங்களது முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் கருணாநிதி தேசியக் கொடியேற்றிய முகப்பு படத்தை தமிழக முதல்வர் வைத்துள்ளார். இதில் எதற்கு அரசியல்? இது தவறான முன்னுதாரணம். திமுகவோ, கருணாநிதி குடும்பமோ சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது போன்று சரித்திரத்தை திரிப்பது ஆகும். முதல்வர் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும். தமிழ்நாடு தினம் கொண்டாடுவதில் அக்கறை எடுத்துக் கொண்ட தமிழக அரசு, இந்தியாவின் 75-வது சுதந்திரக் கொண்டாட்டத்தில் அக்கறை செலுத்தாமல் இருப்பது வருந்தத்தக்கது. 75- வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அரசு விழாவாக முதல்வர் நடத்த வேண்டும்.


திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் பிரிவினை வாதம் அதிகம் வளர்ந்துள்ளது. தேசிய வாதம் மறைக்கப்பட்டிருக்கிறது. ஊழல் பெருகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஓராண்டு கால ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 40 மக்களவை உறுப்பினர்களால் எவ்வித பயனும் இல்லை. எப்போது மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாள்கின்றனரே தவிர, பாராளுமன்றத்தில் தமிழக வளர்ச்சிக்காக எவ்வித குரலும் எழுப்பவில்லை என்றார்.


கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X