ம.பி., பஞ்., தேர்தல்: பெண் உறுப்பினர்கள் தேர்வு; ஆண்வழி உறவு பதவியேற்பு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
போபால்: தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவரது ஆண் உறவு வழியினர் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம் ம.பி., மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ம.பி., மாநிலத்தில் சாகர் மற்றும் தாமோ உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்., தேர்தல் நடந்து முடிந்தது.இம் மாவட்டங்களில் பெரும்பாலனவற்றில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதனையடுத்து அவர்கள்

போபால்: தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவரது ஆண் உறவு வழியினர் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம் ம.பி., மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.latest tamil newsம.பி., மாநிலத்தில் சாகர் மற்றும் தாமோ உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்., தேர்தல் நடந்து முடிந்தது.இம் மாவட்டங்களில் பெரும்பாலனவற்றில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதனையடுத்து அவர்கள் பதவியேற்க அழைக்கப்பட்டனர். ஆனால் பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக தந்தை, சகோதரர், கணவர் என அவர்களது ஆண் வழி உறவு முறையினர் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இச்சம்பவம் வீடியோவாக சமூக வலை தளங்களில் வைரலானது.

இதனையடுத்து ஆண்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததாக ஜெய்சிநகர் கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆஷாராம் சாஹுவை சஸ்பெண்ட் செய்து சாகர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். சம்பவம் குறித்து சாஹூவிடம் கேட்டதற்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பலமுறை அழைப்பு விடுத்த போதிலும் பெண்கள் வரத்தவறினர். இதனையடுத்து குடும்பத்தின் ஆண் உறுப்பினரகள் பதவி பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கிராம பஞ்., உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 பெண்களில் ஒருவரின் தந்தை, இரு பெண்களின் கணவர்கள், மற்றொரு பெண்ணின் மைத்துனர், இன்னும் சிலரின் சகோதரர்கள் பதவி பிரமாணம் எடுத்துகொண்டனர்.


latest tamil newsஅதே போல் தாமோ மாவட்டத்தில் உள்ள கைசாபாத் பிபரியா கிராவ் கிராம பஞ்,,சில் ஆண் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ண சைதன்யா ஜன்பத் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202212:08:18 IST Report Abuse
ஆரூர் ரங் இந்திரா காந்தி பிரதமாராக இருந்தும், சோனியா மறைமுகப் பிரதமராக இருந்தும் அவர்கள் கட்சியே MP MLA மற்றும் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு🤔 கொடுக்க 🤤வில்லையே.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202206:03:42 IST Report Abuse
Mani . V தமிழகத்தில் என்ன வாழுதாம்? ஒரே ஒரு வித்தியாசம், பதவி ஏற்பது பெண்கள்தான். ரௌடிசம் செய்வது அவர்களின் கணவர்கள்தான். அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தாசில்தாரும், கலெக்ட்டரும் முந்திரி பருப்பு சாப்பிட்டுக் கொண்டு, மசாலா டீயை குடித்துக் கொண்டு பொழுதை கழிக்கிறார்கள்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
07-ஆக-202222:43:17 IST Report Abuse
சீனி இவனுங்களை, சேலை கட்டிக்கொண்டு, இல்லை புர்க்கா போட்டு பதவியேற்க்க வரச்சொல்லியிருக்கலாம்... ஹாஹாஹா... மக்கள் பிரதிநிதித்துவம் கேவலமாக போய்க்கொண்டுள்ளது, முக்கியமாக அரசியலில் பெண்களின் பங்கு, சரிசம வாய்ப்பு என்பது பிரச்சனையில் தான் உள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி உட்பட அனைத்து கட்சிகளிலும் பெண்கள் பங்கு குறைவாகத்தான் உள்ளது. பாராளுமன்றம், சட்டசபையில் 30சதம் பெண்களுக்கு ஒதுக்கினால் நல்லது, ஆனா எல்லா கட்சிகளும் இதற்கு எதிராகத்தான் ஓட்டு போடும். நன்கு சம்பாதிக்கும் திமுக அமைச்சர்கள் எந்த பெண்ணையும் மேலே வர விடமாட்டார்கள், பெண் மேயர்களை கூட பத்திரிக்கைகள் முன் சுதந்திரமாக பேச அனுமதிக்கமாட்டார்கள், மைக் மீது கைவைத்து பாடம் எடுத்துவிட்டு தான் பேச அனுமதிப்பார்கள் என்பது வெட்ட வெளிச்ச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X