தாம்பரம் பாதாள சாக்கடை திட்டம் செப்டம்பரில் முடிய வாய்ப்பு?

Added : ஆக 07, 2022 | |
Advertisement
தாம்பரம்:தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், 12 ஆண்டுகளை கடந்தும் முடிவடையாமல் உள்ளது. இப்பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க, திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை புறநகரில் உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில், 2008ம் ஆண்டு, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர முடிவு

தாம்பரம்:தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், 12 ஆண்டுகளை கடந்தும் முடிவடையாமல் உள்ளது. இப்பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க, திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சென்னை புறநகரில் உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில், 2008ம் ஆண்டு, பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. மொத்தம், 24.44 கி.மீ., பரப்பளவு உள்ள, இந்த பகுதிகளுக்கு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் வாயிலாக, 160.97 கோடி ரூபாய் மதிப்பில், திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.


திட்டத்தில், கழிவு நீர் குழாய்கள் பதித்தல், ஆள்நுழைவு வழி அமைத்தல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், கழிவு நீர் அகற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைத்தல் என, பல கட்டங்களாக பிரித்து, பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.பணிகள் துவங்கி நடந்து கொண்டிருந்த போதே, கிழக்கு தாம்பரம் பகுதிகளில், பூமிக்கு அடியில் உள்ள பாறைகளால் பணிகளை செய்ய முடியவில்லை எனக்கூறி, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை நிறுத்தியது.


பின், மேற்கு தாம்பரத்தில், குடிநீர் வாரியமும், கிழக்கு தாம்பரத்தில், நகராட்சி நிர்வாகமும், பணிகளை செய்து வருகின்றன.தற்போது வரை, கிழக்கு தாம்பரத்தில், 98 சதவீத பணிகள் முடிந்துள்ளதாகவும், தாம்பரம்- -வேளச்சேரி சாலையில், 11 மீட்டர் துாரத்திற்கு, பாறைகளை குடைந்து, குழாய் பதிக்கும் பணிகள் செய்ய வேண்டி உள்ளதாகவும், அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேற்கு தாம்பரத்தில், குடிநீர் வாரியம், 90 சதவீத பணிகளை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கிழக்கு மற்றும் மேற்கு என, இரு பகுதிகளிலும் சேர்த்து, செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.


போலீஸ் அனுமதி கிடைக்காமல் இழுத்தடிப்பு?


இச்சூழலில், 2020, அக்.,15ம் தேதி, சேலையூர் அருகே, பாதாள சாக்கடை பணிக்காக சேதப் படுத்த பட்டு இருந்த சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த, இரண்டு இளம் பெண்கள், தவறி கீழே விழுந்ததில், மாநகர பேருந்து மோதி பலியாகினர்.அதன்பின், அடுத்தடுத்து நடந்து விபத்துக்களாலும், சாலை மிக குறுகலாக உள்ளதாலும், பாதாள சாக்கடை பணிகளை செய்ய, அப்போதைய தாம்பரம் நகராட்சி நிர்வாகத்திற்கு, போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்கவில்லை.


தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்து, 10 மாதங்களான நிலையிலும், போலீசாரிடம் அனுமதி வழங்க, மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து, அலைந்து வருகின்றனர்.ஆனால், போலீசார் தரப்பில் இருந்து, உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால், 14 ஆண்டுகளாகியும் இத்திட்டம் முடிக்கப்படாமல் உள்ளது. அரசு சிறப்பு கவனம் செலுத்தினால்தான், இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X