கட்டட பணி நிறைவு சான்று விதிகளில் வருகிறது திருத்தம்?

Added : ஆக 07, 2022 | |
Advertisement
சென்னை:குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,யின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.பணிகள் முடிந்த நிலையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்கு விதிமீறல்கள் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். இந்த ஆய்வு அடிப்படையிலேயே, பணி நிறைவு

சென்னை:குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,யின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


பணிகள் முடிந்த நிலையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்கு விதிமீறல்கள் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். இந்த ஆய்வு அடிப்படையிலேயே, பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்று இருந்தால் மட்டுமே, அந்த கட்டடத்துக்கு மின்சார, குடிநீர் இணைப்புகள் கிடைக்கும்.இதில் சில திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து, அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:அடுக்குமாடி திட்டங்களில் வணிக பயன்பாடுக்கான கட்டடங்களில் அறை பிரிப்பு சுவர்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், குடியிருப்பு கட்டடங்களில் இத்தகைய அறை பிரிப்பு சுவர்கள், வரைபடத்தின் படி இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது கட்டாயம்.இதை தளர்த்துவது குறித்து, கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதை ஏற்று பணி நிறைவு சான்றிதழ் வழங்குவதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


இதற்காக, பொது கட்டட விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. 2021 மே முதல் 2022 ஏப்., வரையிலான காலத்தில் சி.எம்.டி.ஏ., திட்ட அனுமதி பெற்ற கட்டடங்களில் விதிமீறல் உள்ளதா என்று சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது.அது போல, கடந்த ஓராண்டில் சான்று வழங்கப்பட்ட கட்டடங்களில் ஏற்பட்டுள்ள விதிமீறல்கள் குறித்தும் சி.எம்.டி.ஏ., ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X