மண்ணரிப்பை தடுக்க வெட்டிவேர் நடவு செய்யும் பணி துரிதம்| Dinamalar

மண்ணரிப்பை தடுக்க வெட்டிவேர் நடவு செய்யும் பணி துரிதம்

Added : ஆக 07, 2022 | |
பந்தலார்:பந்தலுார் அருகே, காரைக்கொல்லி பகுதியில் மண்ணரிப்பை தடுக்க சணல் பைகளுக்கு இடையில், வெட்டிவேர் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.நீலகிரியில் மழை காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளை தடுக்க, மலை சரிவுகளில் மரங்கள் நடுதல், 'லெமன் கிராஸ்' மற்றும் வெட்டிவேர் நடவு செய்ய, வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.இதில், வெட்டிவேரை சரிவான பகுதிகளில் நடவு
மண்ணரிப்பை தடுக்க வெட்டிவேர் நடவு செய்யும் பணி துரிதம்

பந்தலார்:பந்தலுார் அருகே, காரைக்கொல்லி பகுதியில் மண்ணரிப்பை தடுக்க சணல் பைகளுக்கு இடையில், வெட்டிவேர் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.நீலகிரியில் மழை காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளை தடுக்க, மலை சரிவுகளில் மரங்கள் நடுதல், 'லெமன் கிராஸ்' மற்றும் வெட்டிவேர் நடவு செய்ய, வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

இதில், வெட்டிவேரை சரிவான பகுதிகளில் நடவு செய்வதன் மூலம், நீர் பிடிப்பு திறன் அதிகரித்து தண்ணீர் மற்றும் மண்ணரிப்பு மூலம் சேதம் வராமல் தடுக்கிறது. இதனை, பந்தலுார் காரைக்கொல்லி பகுதியில், கூடலுார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பில், மலை சரிவு பகுதியில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம் கூறுகையில்,'' குடியிருப்பு பகுதிகளில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க, இதனை நடவு செய்கிறோம். அனைத்து பகுதிகளிலும் இதனை நடவு செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X