சரணாலயங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதியினர் மகிழ்ச்சி| Dinamalar

சரணாலயங்களுக்கு 'ராம்சர்' அங்கீகாரம்வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதியினர் மகிழ்ச்சி

Added : ஆக 07, 2022 | |
வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்களுக்கு சர்வதேச அளவில் 'ராம்சர்' அங்கீகாரம் தரப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, பர்மா, மியான்மர், வங்கதேசம், சைபீரியா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, 26
சரணாலயங்களுக்கு 'ராம்சர்' அங்கீகாரம்வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதியினர் மகிழ்ச்சி

வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்களுக்கு சர்வதேச அளவில் 'ராம்சர்' அங்கீகாரம் தரப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, பர்மா, மியான்மர், வங்கதேசம், சைபீரியா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, 26 வகையிலான 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வலசை வருகின்றன.


அக்டோபர், நவம்பர் மாதங்களில் வந்து இனப்பெருக்கத்திற்கு பின், மே, ஜூன் மாதங்களில், சொந்த நாட்டிற்கு குஞ்சுகளோடு திரும்புகின்றன.அரிய வகை வெளிநாட்டு பறவைகளை காண, பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.வேடந்தாங்கல் ஏரி மட்டுமின்றி, இங்கிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள கரிக்கிலி பெரிய ஏரியிலும், பறவைகள் கூடுகள் கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.இதனால் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இணையாக, கரிக்கிலி பகுதியும், 1989ல் பறவைகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டது.


ஆண்டுதோறும் வேடந்தாங்கலில், பறவைகளின் சீசன் துவங்கும் போது, கரிக்கிலி சரணாலயமும், சுற்றுலா பயணியரின் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது.பறவைகளின் வருகை அதிகரிப்பு காரணமாகவும், ஏரிகளின் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு சார்பில், வேடந்தாங்கல், கரிக்கிலி சரணாலயங்களுக்கு, சர்வதேச அங்கீகாரமான 'ராம்சர்' அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.இந்த அங்கீகாரம், சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் இருப்பதால், இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேடந்தாங்கல் விவசாயி இ.பரமசிவம், 51, என்பவர் கூறியதாவது:வேடந்தாங்கல் சரணாலயத்தை சுற்றி, அதிகம் அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன மருந்து போன்றவற்றை, நிலங்களில் பயன்படுத்துவதில்லை.பல விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றனர். ஏனென்றால், அருகில் உள்ள வேடந்தாங்கல், கரிக்கிலி பறைவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள், வயல்களில் உரமிடும் நேரத்தில் தண்ணீர் குடிக்கும்.தவிர, அதில் உள்ள நெல்மணிகளை சாப்பிடுவதால், ரசாயன மருந்துகளை முழுமையாக தவிர்க்கிறோம்.


பறவைகளுக்கு உணவு கிடைக்கும் வகையில், அதிகம் லாபம் தரும் சவுக்கு போன்ற மர பயிரை தவிர்த்து, நெல் பயிரிடுகிறோம். மேலும், வேடந்தாங்கலில் பறவைகள் முகாமிடும் நாட்களில், அவற்றுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு தீபாவளிக்கு பட்டாசுகளை கூட வெடிக்கமாட்டோம். இப்படிப்பட்ட சூழல் வளர்த்துள்ள நிலையில், 'ராம்சர்' அங்கீகாரம் கிடைத்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால், வேடந்தாங்கல், கரிக்கிலிக்கு மாநில, மத்திய அரசுகளின் பல்வேறு உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.50 ஆயிரம் பறவைகள்


மதுராந்தகம் தாலுகாவில், பல ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம், நாட்டிலேயே மிகவும் பழமையான,பாரம்பரிய சிறப்புள்ள பறவைகள் சரணாலயம். கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, பாம்புதாரா உள்ளிட்ட, 40 வகைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், ஆண்டுதோறும் வருகின்றன. சர்வதேச அளவில் சுற்றுலா பயணியரின் கவனத்தை கவர்ந்துள்ள நிலையில், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் 'ராம்சர்' அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


என்.ராஜேந்திரன், 75,


சமூக ஆர்வலர், துறையூர், கரிக்கிலி.


போதிய வசதிகள் தேவை


சமூக ஆர்வலர் கூறியதாவது:கடந்த 2014ல், 50 லட்சம் ரூபாய் நிதியில் கரிக்கில் சரணாலயம் மேம்படுத்தப்பட்டது. நடைபாதை விரிவுபடுத்துதல், பார்வையாளர்கள் மாடம், குடிநீர் குழாய்கள், கழிப்பறை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கரிக்கிலி சரணாலயத்தை சரியான முறையில் பராமரிக்காததால், ஏரி துார்ந்துள்ளது. இதனால், அதிக நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது.


இதேபோல், சுற்றுச்சுவர், கம்பி வேலி, பெயர் பலகைகள், பார்வையாளர்கள் மடங்கள், கற்கள் பதித்த நடைபாதை, பயணியர் அமர ஆங்காங்கே இருக்கைகள், பறவைகள் மற்றும் விலங்குகள் வடிவில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, புதர்மண்டி உள்ளன.


சரணாலயங்களுக்கு வரும் சுற்றுலா பயணியர் தங்குவதற்கு விடுதி, கழிப்பறை, முறையான போக்குவரத்து, சுத்தமான குடிநீர், பயணியருக்கு ஓய்வு அறை, தரமான உணவு வழங்கும் ஹோட்டல்கள் போன்ற வசதிகள் கிடையாது. தற்போது 'ராம்சர்' அங்கீகாரம் கிடைத்துள்ளதால், நிதி ஒதுக்கி மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X