அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை

Added : ஆக 07, 2022 | |
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவில், கொரோனா தொற்று ஏறுமுகமாகிறது. இதை தீவிரமாக கருதிய மத்திய அரசு, கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.மக்களை வாட்டி வதைத்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால், அரசு நிம்மதியடைந்தது. ஆனால், மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஜூலையுடன் ஒப்பிட்டால், ஆகஸ்ட்டில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது. இதை கவனித்த மத்திய அரசு,



பெங்களூரு-கர்நாடகாவில், கொரோனா தொற்று ஏறுமுகமாகிறது. இதை தீவிரமாக கருதிய மத்திய அரசு, கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.மக்களை வாட்டி வதைத்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால், அரசு நிம்மதியடைந்தது. ஆனால், மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஜூலையுடன் ஒப்பிட்டால், ஆகஸ்ட்டில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது. இதை கவனித்த மத்திய அரசு, கொரோனா பரிசோதனை அளவை அதிகரிக்கும்படி, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், கர்நாடக சுகாதாரத்துறை செயலர் அனில்குமாருக்கு, எழுதிய கடிதம்:தொற்று பரவாமல் கட்டுப்படுத்த, அவசர நடவடிக்கை எடுங்கள். 24 மாவட்டங்களில் தொற்று அளவு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில், பண்டிகைகள் வருகின்றன; மக்கள் கூட்டமாக சேரும் வாய்ப்புள்ளது. இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா பரிசோதனை அளவை, தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணியருக்கு, பரிசோதனை நடத்தும் விதிமுறையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X