ராம் நகர்-சோலுார் கிராமத்தில், தொடர் மழையால் கொட்டகை இடிந்து ஷெட் மீது விழுந்ததில், நேபாள குடும்பத்தின் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. இருவர் காயமடைந்தனர்.நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள், பிழைப்பு தேடி ராம்நகருக்கு வந்தன. மாகடியின் சோலுார் கிராமத்தில், ஒரே ஷெட்டில் வசிக்கின்றனர். ஹோட்டல் ஒன்றில் பணியாற்றுகின்றனர்.ஷெட்டை ஒட்டியபடி, கங்க ரங்கம்மா என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகை உள்ளது. மழையால் நனைந்திருந்த கொட்டகை சுவர், நேற்று அதிகாலை இடிந்து ஷெட் மீது விழுந்தது. இதில், பர்பீன், 4, இஷிகா, 3, உயிரிழந்தனர். இருவர் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.குதுர் போலீசார் விசாரிக்கின்றனர்.