கோத்தகிரி,:கோத்தகிரி கோடநாடு ஊராட்சியில், மாநில கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.கோத்தகிரி கோடநாடு ஊராட்சியில், தனிநபர் கழிப்பிடம், திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக செயல்படுவதால், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்துள்ளது.இக்கிராமத்தை, மாநில அரசின் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி) சாம்சாந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஊராட்சித் தலைவர் சுப்பி காரி, ஊராட்சி செயலர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.