அரைகுறை மழை நீர் வடிகால் பணிவிரைவில் முடிக்க கோரிக்கை

Added : ஆக 07, 2022 | |
Advertisement
உள்ளகரத்தில் நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணி, அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது.தொடர் மழைக்கு முன், போர்க்கால அடிப்படையில் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னை, மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் உள்ளகரம் அமைந்துள்ளது. மண்டல அலுவலகம் அமைந்துள்ள புழுதிவாக்கம் பிரதான சாலை நெடுஞ்சாலைத் துறைக்கு
அரைகுறை மழை நீர் வடிகால் பணிவிரைவில் முடிக்க கோரிக்கை

உள்ளகரத்தில் நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணி, அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழைக்கு முன், போர்க்கால அடிப்படையில் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னை, மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் உள்ளகரம் அமைந்துள்ளது. மண்டல அலுவலகம் அமைந்துள்ள புழுதிவாக்கம் பிரதான சாலை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது.
இச்சாலை, மவுன்ட்- - மேடவாக்கம் சாலையில் இருந்து மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெரு சாலை வரை அமைந்துள்ளது. தொடர் மழை காலத்தில் இச்சாலையில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு பெய்த கன மழையின் போது, இச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இது குறித்து நம் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் நடவடிக்கையாக, புழுதிவாக்கம் பிரதான சாலையில், 1.3 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால், சிறு பாலம் அமைக்கப் பட்டது.இந்த வடிகால், ௮௨௦ அடி நீளம், 5அடி அகலம், தேவைக்கேற்ற ஆழத்திற்கு அமைந்து உள்ளது. ஆனால், இப்பணிகள் முழுமை பெறவில்லை.
வடிகாலில் ஆங்காங்கே மரம், மின்கம்பம் குறுக்கிடுவதால், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. மேலும், அந்த வடிகால் குடியிருப்பு, வர்த்தக நிறுவனங்களின் குப்பை தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது.பருவ மழை பெய்யத் தொடங்கினால், மீண்டும் அச்சாலை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து, நெடுஞ்சாலைத் துறையினர் வடிகால் திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
- -நமது நிருபர் --


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X