பெங்களூரு-'சாம்ராஜ்பேட் ஈத்கா மைதானம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது அல்ல. இது வருவாய்த்துறை சொத்து' என, பெங்களூரு மாநகராட்சி அறிவித்ததால், சாம்ராஜ்பேட் பொதுமக்கள் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.இது குறித்து, கூட்டமைப்பு பிரமுகர்கள் கூறியதாவது: சாம்ராஜ்பேட் ஈத்கா மைதானம், வக்பு வாரியத்தை சார்ந்தது அல்ல. வருவாய்த் துறை சொத்து என, மாநகராட்சி அறிவித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இம்முறை சுதந்திர தினத்தை, ஈத்கா மைதானத்தில் கொண்டாடுவோம்.இது குறித்து, மாநகராட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதிகாரிகள் அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் சுதந்திர தினத்தை ஆடம்பரமாக கொண்டாடுவோம். ஹிந்து அமைப்புகளும் நிகழ்ச்சிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளன.மைதானம் பொது சொத்து. மூவர்ண கொடியை பறக்கவிட, யாருடைய அனுமதியும் தேவையில்லை. எங்கள் உயிர் போனாலும், கொடியேற்றியே தீருவோம். வக்பு வாரியம் போராட்டம் நடத்தினால், நாங்களும் போராட தயார். எங்களிடமும் ஆவணங்கள் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.