காலி பால் கவர் கொடுத்தால்பெட்ரோலுக்கு தள்ளுபடி

Added : ஆக 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஜெய்ப்பூர்,-ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவற்றை கொடுத்தால், பெட்ரோல் அல்லது டீசல் விலையில் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அமல்படுத்தியுள்ளார்.ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
காலி பால் கவர் கொடுத்தால்பெட்ரோலுக்கு தள்ளுபடி

ஜெய்ப்பூர்,-ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவற்றை கொடுத்தால், பெட்ரோல் அல்லது டீசல் விலையில் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அமல்படுத்தியுள்ளார்.

ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதையடுத்து இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் பால், குடிநீர் உள்ளிட்டவை பாலித்தீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படுகின்றன.பயன்படுத்திய பின் துாக்கி எறியப்படும் காலி பாக்கெட்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்கும் வகையிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளார்.

அதன்படி, 1 லிட்டர் காலி பால் பாக்கெட் அல்லது இரண்டு அரை லிட்டர் காலி பால் பாக்கெட் அல்லது 1 லிட்டர் குடிநீர் காலி பாட்டிலைக் கொடுத்தால், பெட்ரோல் அல்லது டீசல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும். 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 1 ரூபாயும், டீசலுக்கு, 50 காசுகளும் தள்ளுபடி வழங்குகிறார்.மக்கள் வழங்கும் காலி பால் பாக்கெட்டை, அங்குள்ள பிரபல பால் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்.

அவர்கள் அதை பாதுகாப்பான முறையில் அழிக்கின்றனர்.பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக் குமார் முந்தராவின் இந்த முயற்சிக்கு, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பால் தயாரிப்பு நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளன. மக்களும் ஆர்வமுடன் காலி பால் பாக்கெட்களை வழங்கி தள்ளுபடி பெறுகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
08-ஆக-202210:35:11 IST Report Abuse
Manikandan Sivalingam நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X