இணையதள சேவை மணிப்பூரில் முடக்கம்

Added : ஆக 08, 2022 | |
Advertisement
இம்பால்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த, ஐந்து நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவையை முடக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மலைப்பகுதிக்கு தன்னாட்சி கோரி, பழங்குடியின மாணவர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தலைநகர் இம்பாலில் நேற்று
இணையதள சேவை, மணிப்பூர், முடக்கம்

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த, ஐந்து நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவையை முடக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மலைப்பகுதிக்கு தன்னாட்சி கோரி, பழங்குடியின மாணவர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தலைநகர் இம்பாலில் நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு வந்தனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி, சங்கத்தின் நிர்வாகிகள் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களை விடுவிக்கக் கோரி மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிஷ்னுபூர் மாவட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுதும் கலவரம் பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த, அடுத்த ஐந்து நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவையை முடக்கி வைக்க, மாநில அரசு சார்பில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X