பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் கைது

Added : ஆக 08, 2022 | |
Advertisement
புதுடில்லி-ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு புதுடில்லியில் கைது செய்துள்ளது.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோர், நிதி திரட்டுவோர் குறித்து, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா உட்பட ஆறு மாநிலங்களில் பல இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில்
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் கைது

புதுடில்லி-ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு புதுடில்லியில் கைது செய்துள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோர், நிதி திரட்டுவோர் குறித்து, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா உட்பட ஆறு மாநிலங்களில் பல இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புதுடில்லியில் மோஷின் அஹமது என்பவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர் பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்தவர். தீவிர மதப்பற்றாளராக மாறிய இவர், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட துவங்கினார்.ஐ.எஸ்., அமைப்புக்காகஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இவர் நிதி வசூலித்து வந்துள்ளார். தொடர் கண்காணிப்புக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஐ.எஸ்., அமைப்பின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மற்றொருவர் கைது

நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த அன்சருல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பினர், வடகிழக்கு மாநிலமான அசாமுக்குள்நுழைந்து பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். மாநில அரசு மேற்கொண்ட அதிரடி சோதனைகளில், இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், பார்பெட்டா மாவட்டத்தில், அபுபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயத் தொழிலில் ஈடுபடுவதாக, ஜிகாதி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X