7 ஜென்மம் எடுத்தாலும் பிரதமராக முடியாது: பீஹார் முதல்வருக்கு 'மாஜி' அமைச்சர் சாபம்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பாட்னா-''பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஏழு ஜென்மம் எடுத்தாலும் பிரதமர் பதவியை அடைய முடியாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் கூறியுள்ளார். பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளத்தில் நிதிஷ் குமாருக்கும்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா-''பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஏழு ஜென்மம் எடுத்தாலும் பிரதமர் பதவியை அடைய முடியாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் கூறியுள்ளார்.



latest tamil news


பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளத்தில் நிதிஷ் குமாருக்கும், கட்சியின் முன்னாள் தேசிய தலைவரான ஆர்.சி.பி.சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக பதிலளிக்கும்படியும், கட்சியின் சார்பில் சிங்குக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இந்த புகாரை அவர் மறுத்து உள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நேற்று முன்தினம் அவர் விலகினார்.

இது குறித்து ஆர்.சி.பி.சிங் நேற்று கூறியதாவது:கட்சியின் எதிர்ப்பை மீறி, நான் மத்திய அமைச்சர் பதவியை ஏற்றதாக கூறப்படுவது முழு பொய். நிதிஷ் குமார் கூறியதால் தான் அந்தப் பதவியை ஏற்றேன்.நான் மத்திய அமைச்சரானதால், எனக்கு எதிராக கட்சியில் சதி திட்டம் நடந்துள்ளது. வயிற்றெரிச்சலுக்கு எந்த மருந்தும் கிடையாது.முறைகேடுகள் செய்து சொத்துக்கள் வாங்கியுள்ளதாக தற்போது புகார் கூறியுள்ளனர்.


latest tamil news



தேவையில்லாமல் என் மகள்களை இந்தப் பிரச்னையில் இழுத்து விட்டுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்தோடு நிதிஷ்குமார் செயல்படுகிறார்.ஏழு ஜென்மம் எடுத்தாலும், நிதிஷ் குமாரால் பிரதமராக முடியாது. ஐக்கிய ஜனதா தளம் ஒரு மூழ்கும் கப்பல்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202210:49:51 IST Report Abuse
kulandai kannan பீகாரின் ஷிண்டே??
Rate this:
Cancel
Arumugam Saravanan - puducherry,இந்தியா
08-ஆக-202201:17:43 IST Report Abuse
Arumugam Saravanan Coming soon India prime minister of India Nitish Kumar ji
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X