மஹாராஷ்டிரா அமைச்சரவை இந்த வாரத்தில் விரிவாக்கம்?

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | |
Advertisement
புதுடில்லி-'மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம், 15ம் தேதிக்கு முன்பாகவே நடக்கும். துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முக்கியமான உள்துறையை கவனிப்பார்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனாவில் ஏற்பட்ட குழப்பத்தால், முதல்வர் பதவியில் இருந்து அக்கட்சித்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம், 15ம் தேதிக்கு முன்பாகவே நடக்கும். துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முக்கியமான உள்துறையை கவனிப்பார்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news


மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனாவில் ஏற்பட்ட குழப்பத்தால், முதல்வர் பதவியில் இருந்து அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விலகினார். இதைத் தொடர்ந்து ஜூன் 30ம் தேதி முதல்வராக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிசும் பதவியேற்றனர்.

புதிய அரசு அமைந்து, ஒரு மாதத்துக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவுபடுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் இதை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.'சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தபோது, 32 நாட்களுக்கு ஐந்து பேர் மட்டுமே அமைச்சராக இருந்தனர். மிக விரைவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும்' என, தேவேந்திர பட்னவிஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், வரும் 15ம் தேதிக்கு முன்பாகவே அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக, 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பர் என்றும், முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையை, தேவேந்திர பட்னவிஸ் கவனிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X