பலாத்காரத்துக்கு தூக்கு தேவையா?: ராஜஸ்தான் முதல்வர் சர்ச்சை கருத்து!

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி-''பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது,'' என, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். டில்லியை சேர்ந்த நிர்பயா என்ற 23 வயது பெண், 2012 டிசம்பரில், ஓடும் பஸ்சில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொடூரமாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-''பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது,'' என, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.latest tamil newsடில்லியை சேர்ந்த நிர்பயா என்ற 23 வயது பெண், 2012 டிசம்பரில், ஓடும் பஸ்சில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொடூரமாக துன்புறுத்தப்பட்டார். சிகிச்சை பலனின்றி அந்த பெண் மருத்துவமனையில் உயிர்இழந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதன் பின், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நிர்பயா வழக்குக்கு பின், பாலியல் குற்றவாளிகளை துாக்கிலிடும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனால், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு எதிராக சாட்சி சொல்லிவிடுவார் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு ஏற்படுகிறது.


latest tamil news


இதையடுத்து பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களை அவர்களை கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது.இவ்வாறு அவர் கூறினார்.ராஜஸ்தான் முதல்வரின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு துாக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என, அசோக் கெலாட் கூறுகிறாரா' என, பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202218:15:09 IST Report Abuse
Prabakaran J check recent wanted list with AshK...AIC atleast form a committee to enquire AK
Rate this:
Cancel
08-ஆக-202212:47:31 IST Report Abuse
அருணா ஏன் அரசியல் வாதிகள் காலக் கொழுந்துகள் நண்பர்கள் சம்பந்தப் பட்டிருந்தால் தண்டனையை ரத்து செய்து விடலாமா
Rate this:
Cancel
சொல்ல மறந்த கதை எய்தவனை விட்டு அம்பை நோவதேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X