டீசல் வாங்க பணம் இல்லாததால்அரசு பஸ்களின் சேவை குறைப்பு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
திருவனந்தபுரம்-டீசல் வாங்க பணம் இல்லாததால், கேரளாவில் நேற்று அரசு பஸ்களின் சேவை குறைக்கப்பட்டன. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம், தங்கள் மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்களை இயக்குகிறது. இதன் வாயிலாக கேரள அரசுப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம்-டீசல் வாங்க பணம் இல்லாததால், கேரளாவில் நேற்று அரசு பஸ்களின் சேவை குறைக்கப்பட்டன.



latest tamil news


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம், தங்கள் மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்களை இயக்குகிறது. இதன் வாயிலாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் 6.5 கோடி ரூபாய் வசூலாகிறது.


latest tamil news


ஆனால், டீசலுக்கு தினமும் 3.5 கோடி ரூபாய் செலவாகிறது. இதனால் அதற்கான தொகையை முழுமையாக கொடுக்க முடியாமல் கடன் வைத்தது. தற்போதைய நிலையில், ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, 139 கோடி ரூபாய் பாக்கி வைத்துஉள்ளது. சமீபத்தில் அரசு பஸ்களுக்கு டீசல் வழங்குவதை நிறுத்திய ஐ.ஓ.சி., பாக்கி தொகையை செலுத்தும் வரை அன்றாட தேவைக்கு பணம் செலுத்தி டீசல் வாங்கிக் கொள்ளுமாறு கூறி விட்டது.

எனவே, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தினமும் பணம் கொடுத்து டீசல் கொள்முதல் செய்கிறது. இந்நிலையில் நேற்று, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் பஸ் சேவைகளை திடீரென குறைத்தது. நீண்ட துார பஸ்கள் மற்றும் மாநிலத்துக்குள் 50 சதவீத சாதாரண பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை.

இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொட்டாரக்கரா பஸ் ஸ்டாண்டில் பயணியர் போராட்டம் நடத்தினர். இது குறித்து விளக்கம் அளித்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், 'பலத்த மழை மற்றும் விடுமுறை நாள் என்பதால் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
08-ஆக-202214:49:40 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN விடியலின் திராவிட மாடலும் இப்படித்தான் ..........
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஆக-202209:40:58 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இதுதான் கம்யூனிஸ்ட்களின் லட்சணம். மேற்கு வங்காளத்தை காலி பண்ணியாச்சு. இப்போது கேரளா..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202207:54:17 IST Report Abuse
Kasimani Baskaran கேரள மாடல் இப்படியென்றால் தமிழகத்தில் போக்குவரத்துத்துறை பேருந்துகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு இலவசமாக சேவைகளை நடத்துகிறது. கர்மம்டா...
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
08-ஆக-202209:55:14 IST Report Abuse
Mohanஇனி நம்மாளு அந்த லிப்ஸ்டிக்க்ள எத்தனை கொள்ளை அடிச்சானோ ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X