சீன உளவு கப்பல் விவகாரத்தில் மத்திய அரசு ராஜ தந்திரம்! 9 அம்ச செயல் திட்டத்தின்படி அதிரடி ஆட்டம்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பல ராஜ தந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்தே, உளவுக் கப்பல் வருகையை நிறுத்தி வைக்கும்படி சீனாவிடம் இலங்கை அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்பது அம்ச செயல் திட்டத்தை வகுத்து மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில், நம் மற்றொரு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பல ராஜ தந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்தே, உளவுக் கப்பல் வருகையை நிறுத்தி வைக்கும்படி சீனாவிடம் இலங்கை அரசு வலியுறுத்தி உள்ளது.latest tamil news


இந்த விவகாரத்தில் ஒன்பது அம்ச செயல் திட்டத்தை வகுத்து மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில், நம் மற்றொரு அண்டை நாடான சீனாவின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவுக் கப்பலை, வரும், 11 - 17 வரை நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.ஆச்சரியம்

இந்த உளவுக் கப்பல் வாயிலாக தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள், அணுசக்தி மையங்களை வேவு பார்க்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக நம் நாளிதழில் முதன் முதலில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து இது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என, இலங்கைக்கு மத்திய அரசு வலியுறுத்தி வந்தது.

தற்போது அந்த கப்பல், கிழக்கு சீனக் கடலில் தைவானுக்கு அருகே உள்ளது. செயற்கைக்கோள் ஆய்வு செய்வதற்காகவும், எரிபொருள் நிரப்புவதற்காகவும் அந்தக் கப்பல் இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியக் கடல் பகுதிகளில் வேவு பார்க்கும் நோக்கத்துடனேயே அந்தக் கப்பல் வரவுள்ளதாக மத்திய அரசு சந்தேகப்படுகிறது.மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளை அடுத்து, இந்தக் கப்பலின் பயணத்தை நிறுத்தி வைக்கும்படி, சீனாவுக்கு இலங்கை அரசு கடிதம் அனுப்பியுள்ளது; இது சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.ஆலோசனை

இலங்கை அரசின் இந்த அறிவிப்பு, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம், சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது.

அதற்கான கடனைத் திருப்பி தர முடியாததால், சீனாவுக்கு, 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை அரசு கொடுத்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கடன்களில், 10 சதவீதம், சீனா வழங்கியதே.இந்த சூழ்நிலையில், சீனாவுக்கு எதிராக இலங்கை கருத்து தெரிவித்துள்ளதற்கு முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடி அரசின் ராஜ தந்திர நடவடிக்கைகள் தான் என கூறப்படுகிறது.இந்தப் பிரச்னை உருவான உடனேயே, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.துாதரக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இலங்கை அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், பிரதமர் மோடியின் திட்டவட்டமான கருத்து தெரிவிக்கப்பட்டது.நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மத்திய அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்து உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் முதுகில் குத்துவதுபோல் செயல்படலாமா என்று மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.மேலும், ஏற்கனவே இலங்கை பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் சிக்கியுள்ளது. அதை சமாளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் அனுப்பி மத்திய அரசு உதவியுள்ளது. ஆனால் அதை, இந்தியாவை உளவு பார்ப்பதற்காக வரும் சீன உளவுக் கப்பலுக்கு வழங்குவதா என்றும் கேட்கப்பட்டது.இந்நிலையில் வரும் செப்டம்பரில் ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து யோசிக்கப்படும் என்று மிரட்டும் அளவுக்கும் நெருக்கடி தரப்பட்டது.


latest tamil news


இவை அடங்கிய ஒன்பது அம்ச செயல் திட்டத்தை பிரதமர் மோடி வகுத்து தந்தார். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. இதையடுத்தே உளவுக் கப்பலின் பயணத்தை நிறுத்தி வைக்கும்படி சீனாவுக்கு இலங்கை அறிவுறுத்தியுள்ளது.


அரசுகள் அலட்சியம்

இந்த விவகாரம், தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தொடர்புடையவை. அங்குள்ள முக்கிய இடங்களை உளவு பார்க்கவே சீனக் கப்பல் இலங்கைக்கு செல்லவிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில், இந்த மாநில அரசுகள் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம், பார்லிமென்டில் இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சிகளின் எம்.பி.,க்கள் இது குறித்து பிரச்னை எழுப்பவில்லை.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிகள் இதை ஒரு தீவிரப் பிரச்னையாகவே பார்க்கவில்லை என்று தோன்றுவதாக, உளவு அமைப்புகள் கூறுகின்றன.தேவையில்லாத பிரச்னைகளை முன்வைத்து பார்லிமென்டை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்தக் கட்சியினர், தங்கள் மாநிலத்தின் பாதுகாப்பு பிரச்னை குறித்து பேசாமல் இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.அவசர ஆலோசனை

கப்பலின் வருகையை ரத்து செய்யும்படி இலங்கை அரசிடமிருந்து வந்த கடிதம், சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இலங்கையில் உள்ள சீன துாதரக அதிகாரிகள், இது குறித்து ஆலோசிப்பதற்காக அவசர கூட்டத்தை கூட்டும்படி இலங்கை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபர் ரணிலுக்கும், சீன துாதர் ஜி ஜென்காங்கிற்கும் இடையே ரகசிய ஆலோசனை நடந்ததாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இலங்கை அரசு இதை மறுத்துள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Jamal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-202210:04:47 IST Report Abuse
Syed Jamal "மாநிலத்தின் பாதுகாப்பு பிரச்சனையா" பாதுகாப்பு விஷயத்தில் மத்திய மாநில வேறுபாடு உண்டா என்ன பாதுகாப்பு என்பது மொத்த நாட்டுக்கும் பொதுவானது தானே. தாங்கள் பேசுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் வசதியாகவும், வாய்ப்பாகவும் ஒரு விஷயம் கிடைத்து விட்டால் போதுமே.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
08-ஆக-202211:10:43 IST Report Abuse
தமிழ்வேள்முதலில் பாதிக்கப்படுவது மாநிலமே ..மாநில அரசு தன்னுடைய கட்சி நலன்களுக்காக, தேசப்பற்றை அடகுவைக்க முயலும் வாய்ப்புகள் ஆந்திரம் தமிழகம் கேரளத்தில் அதிகம். அதைத்தான் குறிப்பிடுகிறது பாரத சர்க்கார்.. [திமுக, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் முதலியன தேச துரோக அமைப்புகளே. தேசப்பற்று கிஞ்சித்தும் கிடையாது இவர்களிடம்]...
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
08-ஆக-202208:25:14 IST Report Abuse
shyamnats கச்ச தீவை தாரை வார்க்கும் போதே இவர்கள் தேச பக்தி வெளிப்பட்டதே. இப்பொழுது ஒவ்வொருநாளும் மீனவர்களுக்கு தொல்லை. முல்லை பெரியாறில் உரிமையை நிலை நாட்டுதல், உள் நாட்டு பிரச்சனையில் சுணக்கம், எதற்கெடுத்தாலும் மத்திய அரசோடு போராட்டம், டாஸ்மாக் ல் மட்டும் முழுக்கவனம், எண்ணிக்கையை குறைக்காமல் சமுதாயத்தில் மது அடிப்படையிலான குற்றங்கள், போக்குவரத்து விபத்துகள் அதிகரிப்பு இந்து மத விரோத போக்கு எல்லாம் இவர்கள் நோக்கத்தை, குறிக்கோளை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுகிறதே.
Rate this:
Cancel
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
08-ஆக-202208:17:59 IST Report Abuse
Nithila Vazhuthi ஒன்றிய அரசின் முக்கியத்துறைகள் பாதுகாப்பு துறை (இராணுவம்) மற்றும் வெளியுறவு துறை அவற்றில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது ஒன்றிய அரசின் தலையாய கடமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X