கொச்சி- - தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | |
Advertisement
மூணாறு---கொச்சி - -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு கேப் ரோடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவால், தேனிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்கிறது. இதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன.கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு -போடி மெட்டு இடையே சாலை அகலப்படுத்தும் பணிக்கு மண்

மூணாறு---கொச்சி - -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு கேப் ரோடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவால், தேனிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்கிறது. இதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன.கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு -போடி மெட்டு இடையே சாலை அகலப்படுத்தும் பணிக்கு மண் எடுக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, மூணாறு அருகே கேப் ரோட்டில் விதிமுறைகள் மீறி பாறை கள் உடைக்கப்பட்டதால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது.

இறுதியாக, ஜூலை 14 இரவில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்த வழியில் தேனிக்கு 10 நாட்கள் போக்குவரத்து தடைபட்டதால், மாற்று வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.இந்நிலையில் கேப் ரோடு அருகே நேற்று முன்தினமும் இரவு நிலச்சரிவு ஏற்பட்டு மீண்டும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. மண் அகற்றும் பணி நேற்று துவங்கியது.''மழை குறைந்தால் மண் அகற்றும் பணி இன்று நிறைவடைந்து, போக்குவரத்து துவக்கப்படும்,'' என நெடுஞ்சாலைத் துறை நிர்வாக பொறியாளர் ரெக்ஸ் பெலிக்ஸ் தெரிவித்தார்.


latest tamil news


தற்போது ஆனச்சால், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி, பூப்பாறை வழியாக தேனிக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.கொச்சி - -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி சாலையில் பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே, சாலையில் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளது. அங்கு ஒரு வழியில் வாகனங்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X