'ரூல் கர்வ்' விதி:அ.தி.மு.க.,ஆர்ப்பாட்டம்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை,-முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், 'ரூல் கர்வ்' விதிமுறையை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி வரை நீரை தேக்க முடியாததற்கு, 'ரூல் கர்வ்' என்ற விதி தான் காரணம். இதன் காரணமாக, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை,-முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், 'ரூல் கர்வ்' விதிமுறையை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி வரை நீரை தேக்க முடியாததற்கு, 'ரூல் கர்வ்' என்ற விதி தான் காரணம். இதன் காரணமாக, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது; 'ரூல் கர்வ்' பிரச்னை இல்லை. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல், மத்திய நீர்வள ஆணையம் இந்த ரூல் கர்வ் விதியை வகுத்துள்ளதா என்று தெரியவில்லை.


latest tamil news



எனவே, முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிட்டு, ரூல் கர்வ் விதி குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய ரூல் கர்வ் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விதியை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
08-ஆக-202210:35:20 IST Report Abuse
தஞ்சை மன்னர் "" முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிட்டு, ரூல் கர்வ் விதி குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் "" அதற்க்கு அர்த்தமும் அதில் என்ன கூறி உள்ளது பற்றி நீங்கள் கூறலாமே ஹி ஹி நமக்குத்தான் தெரியாதே ஆங்கிலமும் தெரியாத ஹிந்தி யம் தெரியாது
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
08-ஆக-202210:33:05 IST Report Abuse
JeevaKiran ரூல் கர்வ் என்றால் என்ன? அதை முதலில் விளக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X