அரசு மருத்துவமனைகளில் 4,308 பணியிடங்கள் காலி

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
-''தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட 4,308 பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், 1,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் என, 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

-''தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட 4,308 பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.



latest tamil news


அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், 1,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் என, 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்து, செப்டம்பர் இறுதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு இருப்பதால், எல்லை பகுதியான 13 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


நோய் தடுப்பு நடவடிக்கை!

தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, ஆறுகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொற்று நோய் தடுப்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. தற்காலிக முகாம்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, உரிய மருந்துகள் வழங்கப்படுகின்றன. காய்ச்சல், சிறுகாயங்கள், கண் நோய், தோல் நோய் போன்ற சிறு உபாதைகளுக்கு, மருத்துவ சிகிச்சை மற்றும் தொடர் பராமரிப்பு அளிக்கப்படுகிறது.கர்ப்பிணியரை, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202214:57:31 IST Report Abuse
ஆரூர் ரங் இத்தனை நாளாக அதனைச் செய்யாமல் இருந்த காரணம்? தலைக்கு மேல்😇 வேலையோ?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-ஆக-202212:47:13 IST Report Abuse
raja அப்புறம் என்னா ... புறப்பட்டு விட்டானே.......
Rate this:
raja - Cotonou,பெனின்
08-ஆக-202213:12:48 IST Report Abuse
rajaவிடியல் ......
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
08-ஆக-202209:56:38 IST Report Abuse
Narayanan ஆக உங்கள் துறையிலும் ஆள் சேர்க்கும் பணியின் மூலம் பைநிறைக்கும் பணி தொடங்க இருக்கிறது . வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X