'கால் டாக்சி' ஓட்டுனர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம்

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | |
Advertisement
சென்னை--'கால் டாக்சி' டிரைவர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட, 400 வகையான பணியாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், பா.ம.க., - எம்.பி., அன்புமணி கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அமைச்சர் அளித்துள்ள பதில்:கால் டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--'கால் டாக்சி' டிரைவர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட, 400 வகையான பணியாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.



latest tamil news



ராஜ்யசபாவில், பா.ம.க., - எம்.பி., அன்புமணி கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அமைச்சர் அளித்துள்ள பதில்:கால் டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட, 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பணியின் போது உயிரிழப்பு, ஊனம் ஏற்படுதல் ஆகியவற்றுக்கு இழப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவம், மகப்பேறு பயன்கள், முதுமைக்கால பாதுகாப்பு போன்ற விஷயங்களில், பொருத்தமான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வகுக்க, 2020-ம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகள் வகை செய்கின்றன.இதற்காக, சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும், இந்த விதிகள் வகை செய்கின்றன.


latest tamil news


இத்தகைய தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு வருமானத்தில், ௧ முதல் ௨ சதவீத தொகையை, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்க வேண்டும். தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்கள், அவர்களை பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ளவும், அவர்களை பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்கவும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X