ஹவாலா பணம் ரூ.52 லட்சம் பறிமுதல்

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை--ரயிலில் எடுத்து வரப்பட்ட ஹவாலா பணம், 52 லட்சம் ரூபாயை, எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலம் கூடூரில் இருந்து, சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு, நேற்று சர்கார் விரைவு ரயில் வந்தது.அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் குல்தீப்சிங் பால், ரமேஷ், ஜோதி பாண்டே, சீர்சா ஆகியோர், ரயிலில்
ஹவாலா பணம் ரூ.52 லட்சம் பறிமுதல்

சென்னை--ரயிலில் எடுத்து வரப்பட்ட ஹவாலா பணம், 52 லட்சம் ரூபாயை, எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கூடூரில் இருந்து, சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு, நேற்று சர்கார் விரைவு ரயில் வந்தது.அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் குல்தீப்சிங் பால், ரமேஷ், ஜோதி பாண்டே, சீர்சா ஆகியோர், ரயிலில் இருந்து இறங்கிய நபரை பிடித்து விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த ஆர்.பி.எப்., போலீசார், அந்த நபர் வைத்திருந்த கறுப்பு நிற பையை சோதனை செய்தனர். அதில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. இதையடுத்து, ஆர்.பி.எப்., அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த வெங்கட சந்தீப் குமார், 36 என்பது தெரிய வந்தது. அவரிடம், ௫1 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதையடுத்து, அந்த பணத்தை வருமான வரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரி பி.பாலசந்திரனிடம், எழும்பூர் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் எல்.எஸ்.சிவநேசன் ஒப்படைத்தார்.ஹவாலா பணமா என்பது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பிடிபட்ட நபர், கூடூர்- - சென்னை சென்ட்ரல் இடையே பயணிக்க, மாதாந்திர 'பாஸ்' வைத்திருந்தது தெரியவந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-202205:00:51 IST Report Abuse
Sivramkrishnan Gk பணம் ரூ.52 லட்சம் பறிமுதல் என்பது தலைப்பு செய்தி. அவரிடம், 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது என்று விவரமான செய்தியில் உள்ளது. மீதி பணம் எங்கே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X