'நாட்டின் வளர்ச்சியில் கைத்தறி': கவர்னர் ரவி

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-இந்தியாவின் வளர்ச்சியில் கைத்தறி முக்கியப் பங்கு வகிப்பதாக, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நேற்று அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக, 2015-ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவை உருவாக்குவதில், கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை நினைவுகூரும் நாள் இது.தமிழகத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-இந்தியாவின் வளர்ச்சியில் கைத்தறி முக்கியப் பங்கு வகிப்பதாக, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.



latest tamil news


தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நேற்று அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக, 2015-ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவை உருவாக்குவதில், கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை நினைவுகூரும் நாள் இது.தமிழகத்தில் தயாராகும் கைத்தறி, நாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.


latest tamil news


2019 - -20ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2.4௪ லட்சம் கைத்தறி நெசவாளர்கள், தமிழகத்தில் உள்ளனர். இதில் தென் மாநிலங்களில் முதல் இடத்திலும், தேசிய அளவில் மூன்றாவது இடத்திலும் தமிழகம்உள்ளது. தமிழக நெசவாளர்களின் கைவினைத் திறன் ஒப்பற்றது.இந்திய கைத்தறி பொருட்கள், இன்று சர்வதேச சந்தையில் பெரும் அங்கீகாரம் பெற்று வருகின்றன.இந்த ஆண்டு 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடி வருகிறோம். உலகின் குருவாக இந்தியா எழுச்சி பெற, கைத்தறி தொடர்ந்து முக்கியபங்காற்ற வேண்டும். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202214:19:18 IST Report Abuse
தமிழ் அந்த மூணு லட்சம் கோட்டு.....
Rate this:
Cancel
08-ஆக-202211:46:59 IST Report Abuse
மதுமிதா விவசாயிகள் போல் நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் உயர நெசவாளர்களும் ஆதாரம் இவர்களின் உழைப்பை இலவசமாக்காமல் நாம் வாங்க வேண்டும் ஜி
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
08-ஆக-202208:55:37 IST Report Abuse
GMM உண்மை தான். நாடு மின் விசை (power) வளர்ச்சிக்கு முன் குடும்ப விவசாயம், கைத்தறி பெரிதும் உதவியது. ஏரி பொருள் தீரக்கூடியது. மீண்டும் விசையற்ற தொழில் நுட்பம் தேவைப்படும் காலம் வரும். குல தொழில் புரிய அந்த தொழில் சார்ந்த சுமார் 20 சதவீத குடிமக்களை (கைத்தறி, மண் பாண்டம், ஆபரணம், மர வேலை..) அரசு பாதுகாத்து, பராமரித்து வர வேண்டும். அடுத்த நூறாண்டுகளுக்கு உதவும். மத மாற்றம், கலப்பு திருமணம் மனித தொழில் நுட்ப வளர்ச்சிக்கு கலப்பினால் உதவாது. நீச்சல் தெரியாத நபர் மீனவ பெண்ணுக்கு வாழ்வளிக்க முடியாது. பல பட்டம் பெற்றாலும், தொழில் திறன் தன்னம்பிக்கையுடைய வாழ்விற்கு அவசியம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X