சினிபிட்ஸ் ...

Added : ஆக 08, 2022 | |
Advertisement
அடுத்த தலைமுறை படம்சீதாராமம் படத்தின் வெற்றி, துல்கர் சல்மான் உள்ளிட்ட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, தன் கனவுப் படமான கிங் ஆப் கோத படத்தின் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டு உள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. படத்தை பிரபல இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். ஜோஷி இயக்கத்தில், மம்முட்டி நடித்த பல படங்கள், 'ஹிட்'
சினிபிட்ஸ் ...



அடுத்த தலைமுறை படம்

சீதாராமம் படத்தின் வெற்றி, துல்கர் சல்மான் உள்ளிட்ட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, தன் கனவுப் படமான கிங் ஆப் கோத படத்தின் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டு உள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. படத்தை பிரபல இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். ஜோஷி இயக்கத்தில், மம்முட்டி நடித்த பல படங்கள், 'ஹிட்' ஆகியுள்ளன. தற்போது, அடுத்த தலைமுறையினர் இணைந்துள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சு நடக்கிறது.சிறப்பு சேர்த்த விஜய் சேதுபதி

பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். சமீபத்தில், தன் பிறந்த நாளை கொண்டாடிய இவருக்கு, நடிகர் விஜய்சேதுபதி நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். மாளவிகா மோகனன் கூறுகையில், ''என் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக உருவாக்கி, என்னை மிகவும் நேசிக்கவும், சிறப்பாகவும் மாற்றிய அனைவருக்கும் என் அன்பு மட்டுமே,'' என்றார்.நித்யா மேனனுக்கு'லவ் டார்ச்சர்'

நடிகை நித்யா மேனன் நடித்த, திருச்சிற்றம்பலம் படம் விரைவில் வெளியாக உள்ளது. தமிழ், மலையாளம் என, படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நித்யா மேனனை, சினிமா விமர்சகர் ஒருவர், காதலிப்பதாக கூறி, ஆறு ஆண்டுகளாக 'டார்ச்சர்' செய்து வந்தாராம். ஆனால், அவரை மன்னித்து விட்டதாக, நித்யா மேனன் கூறியுள்ளார்.சூரி பேச்சால் சர்ச்சை?

விருமன் பட விழாவில் பேசிய நடிகர் சூரி, 'கோவில் கட்டுவதை விட படிக்க வைப்பது மேல்' என்றார். இதனால், ஹிந்து மதத்திற்கு எதிரானவராக பலராலும் துாற்றப்பட்டார்.இதுகுறித்து, இயக்குனர் பேரரசு கூறியுள்ளதாவது:படிப்புக்கு உதவி செய்யும் சூர்யாவை பாராட்டும் நோக்கத்தோடு பேசிய சூரி, பக்தியை விட படிப்பு முக்கியம் என்ற கருத்தைத் தான் சொல்ல வருகிறார். இதை கோவிலுக்கு எதிரானதாக, ஹிந்து மதத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சூரி, ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல; அவர் நடத்தும் உணவகம் பெயர் கூட 'அம்மன்' உணவகம். அவரை தவறாக நினைப்பதையும், தவறாக விமர்சிப்பதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழில் 'அவதார் - 2'

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் - 2:தி வே ஆப் வார்ட்டர் பிரமாண்டமாக உருவாகிஉள்ளது. இதில், கேட் வின்ஸ்லெட், ஜோ சல்டனா, வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்தாண்டு படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. உலகம் முழுக்க, 160 மொழிகளில், இந்தாண்டு இறுதியில் டிச., 16ல் படம் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X