இந்திய ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 80 சதவீதம் வளர்ச்சி

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை-ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, ஏழு ஆண்டுகளில், 80 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, ராணுவத் துறை செயலர் அஜய்குமார் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டுமானம் செய்து வழங்கப்பட்டன.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, ஏழு ஆண்டுகளில், 80 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, ராணுவத் துறை செயலர் அஜய்குமார் தெரிவித்தார்.



latest tamil news


திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டுமானம் செய்து வழங்கப்பட்டன. அத்துடன், பல்வேறு புதிய கப்பல்கள் கட்டுதல், பழுது நீக்குதல் போன்ற சேவைகளையும் அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியா -- அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க கடற்படையை சேர்ந்த, 'சார்லஸ் டிரியூ' என்ற கடற்படை சரக்கு கப்பல், பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளது.ஆழ்கடல் சேவையில் ஈடுபட்டுள்ள, அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு தேவையான எரிபொருட்கள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், பழுது நீக்கும் கருவிகள் உட்பட, அத்தியாவசிய தேவை பொருட்களை வினியோகிப்பதற்காக, இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

மொத்தம், 41 ஆயிரம் டன் எடை உள்ளது இந்த கப்பல். பழுது மற்றும் பராமரிப்பு பணிக்காக வந்த இந்த கப்பலை, ராணுவ செயலர் அஜய்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:இந்தியா கப்பல் கட்டும் துறையில், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்க கடற்படைக்காக, சமீபத்தில் எல் அண்டு டி நிறுவனம், புதிய கப்பலை கட்டி வழங்கியது.அதைத் தொடர்ந்து, நம் ராணுவ அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், அமெரிக்க ராணுவ அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன், இரண்டு முறை பேச்சு நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படை கப்பல்களை, இந்தியாவில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்பட்டது.அதன்படி, அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ், கட்டுமான நிறுவனத்திற்கு முதன்முறையாக வந்துள்ளது. இது, இந்தியா -- அமெரிக்கா இடையே உள்ள நெருங்கிய உறவு வளர்ந்து வருவதையும், விரிவடைவதையும் காட்டுகிறது. இந்தியா, ராணுவ தளவாட பொருட்கள் ஏற்றுமதியில் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது.

2015 -- 2016ம் ஆண்டில், 1,500 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், தற்போது, 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, ஏழு ஆண்டுகளில், 80 சதவீத வளர்ச்சி. ராணுவ தளவாட பொருட்கள், அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஆறு பெரிய கப்பல் கட்டுமான தளங்கள் செயல்பட்டு வருகின்றன. கப்பல் கட்டுமான துறையில் வளர்ந்து வரும் இந்தியா, முதல்முறையாக ஆறு மெகாவாட் திறன் உடைய டீசல் இன்ஜின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


latest tamil news





இதற்கான முதல் கட்ட அனுமதி மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது.நவீன மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய கப்பல்கள், இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு அஜய்குமார் பேசினார்.நிகழ்ச்சியில், இந்திய கடற்படை 'வைஸ் அட்மிரல்' கோர்மடே, ராணுவத் துறை கூடுதல் செயலர் சஞ்ஜய் ஜாஜூ, அமெரிக்க துணை துாதர் ஜூடித் ரேவின், எல் அண்டு டி கப்பல் கட்டுமான நிறுவனத்தின் மூத்த நிர்வாக துணைத் தலைவர் ஜே.டி.பாட்டில், அமெரிக்க கடற்படை ரியர் அட்மிரல் மைக்கல் பேக்கர் லாயின் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
08-ஆக-202217:18:27 IST Report Abuse
jayvee இந்தியா எப்போது AI மற்றும் சிப் தயாரிப்பில் தன்னிலை மற்றும் அதன் R & D யில் முன்னிலை பெறுகிறதோ அன்றுதான் உண்மையான இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு துவங்கும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-ஆக-202212:34:38 IST Report Abuse
raja வாழ்த்துக்கள்... இதுதாண் மோடியின் மேக் இன் இந்தியா கொத்தடிமைகலே .......
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
08-ஆக-202206:58:44 IST Report Abuse
vadivelu ஐயோ இந்தியா முன்னேறுதே, இலங்கையை போல் ஆக வேண்டும் என்றல்லாவா தினமும் எங்க வழி பாட்டு தளங்களில் வேண்ட சொன்னார்கள், அப்படியும் நல்லது நடக்குதே ஐயோ. நாங்க என்ன செய்ய- புலம்பல் கேட்குதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X