சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சமூகநீதி மாநாட்டில் தீர்மானம்

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை : 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என மதுரையில் நடந்த சமூகநீதி கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.மதுரையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 261 ஜாதிகளை ஒருங்கிணைத்த சமூகநீதி கூட்டமைப்பு மாநாடு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ரஜினி வரவேற்றார். நிர்வாகிகள் விஜயகுமார், ராமராஜூ உட்பட
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த  சமூகநீதி மாநாட்டில் தீர்மானம்


மதுரை : 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என மதுரையில் நடந்த சமூகநீதி கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.மதுரையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 261 ஜாதிகளை ஒருங்கிணைத்த சமூகநீதி கூட்டமைப்பு மாநாடு நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ரஜினி வரவேற்றார். நிர்வாகிகள் விஜயகுமார், ராமராஜூ உட்பட பல்வேறு சமுதாய நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டு மலரை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட டாக்டர் ஜெபமணி பெற்றார். சமூகநீதி கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி பேசுகையில் ''ஆட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.,வின் பழனிசாமி கொண்டுவந்த உள் ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதுகுறித்து தி.மு.க., அரசு மவுனம் சாதிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் சிதறிக்கிடப்பர் என்று நினைத்தனர். ஆனால் இக்கட்சிகள் இவ்வாறு செயல்படுவதால் ஒற்றுமையை காட்ட இங்கு கூடி இருக்கிறீர்கள்'' என்றார். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வகுப்பு வாரியாக இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது, மத்திய அரசு 2011ல் நடத்தப்பட்ட ஜாதிவாரி சமூக, பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
08-ஆக-202213:37:53 IST Report Abuse
jayvee செத்தாலும் சாதி ஒழியாத (சுடுகாட்டு பிரச்சனை), நூறு சதவிகிதம் இடஒதுக்கீடு செய்தாலும் இன்னும் வேண்டும் என்று அலையும் ஜாதி தலைவர்கள் இருக்கும்வரை இந்தியா மட்டுமல்ல தமிழ்நாடு என்றுமே முன்னேறாது ..
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-ஆக-202209:23:22 IST Report Abuse
vbs manian தவறான முடிவு. ஏற்கனவே இலைமறை காய்மறையாக நடக்கும் ஜாதி சண்டைகள் அதிகம் ஆகும். சாதியில்லா சமுதாயம் வேண்டும் என்று சொல்கிறார்கள். முன்னுக்கு பின் முரண்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-ஆக-202208:57:51 IST Report Abuse
அசோக்ராஜ் பன்ச்ச பூதங்களில் ஒன்றான நிலத்தை எல்லா மக்களும் அரசிடம் ஒப்படைத்து விட்டு சமுதாய எண்ணிக்கை அடிப்படையில் வீதம் வைத்து குத்தகைக்கு பெறுவதுதான் சமூக நீதியாக இருக்கும். நிலம் என்பது பொதுவுடமையாக அரசின் கையிலேயே இருக்க வேண்டும். நான் ரெடி. நீங்க ரெடியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X