வேட்டி, சேலை திட்டம்:அண்ணாமலை குற்றச்சாட்டு

Updated : ஆக 08, 2022 | Added : ஆக 08, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
சென்னை-'இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரது அறிக்கை:தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு, 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று கூறிவிட்டு, அதை செயல்படுத்தாமல் மின் கட்டணத்தை யூனிட்டிற்கு, 70 காசு உயர்த்தியுள்ளது.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு, 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று கூறிவிட்டு, அதை செயல்படுத்தாமல் மின் கட்டணத்தை யூனிட்டிற்கு, 70 காசு உயர்த்தியுள்ளது.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல், நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள், 59 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்திய பின் தான், நெசவுக்கு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு மூடுவிழா நடத்த, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. தலா, 1.80 கோடி சேலைகள், வேட்டிகளை நெய்ய, நுால் கொள்முதலுக்கு, 'டெண்டர்'கள் கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.


latest tamil news


நுால் வழங்கிய பின், மொத்த ஒப்பந்தத்தை முடித்து கொடுக்க, குறைந்தது ஐந்து மாதங்களாகும். அதற்கு ஒரு சேலைக்கு, 200 ரூபாயும்; ஒரு வேட்டிக்கு, 70 ரூபாயும் நெய்ய கூலியாக அரசு வழங்க வேண்டும். இப்போது, டெண்டர் கொடுப்பதில் தாமதம் ஆவதால், நெசவாளர்களுக்கு, 486 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த டெண்டரை வழங்கவில்லை எனில், பா.ஜ., மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
08-ஆக-202216:41:59 IST Report Abuse
Priyan Vadanad திண்டுக்கல் பூட்டு போட்டாலும் ஒருசிலர் வாயை மூட முடியாது போல தெரிகிறது.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
08-ஆக-202220:48:42 IST Report Abuse
Dhurveshஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அவரிடம் அரசியல் பேசினேன் என்று சொல்லுகிறான் பாருங்கள்...
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
09-ஆக-202207:58:01 IST Report Abuse
vadiveluகவர்னர் அரசியலை அலசலாம், அவர் கட்சி சார்ந்த அரசியல் செய்வதுதான் தவறாக பார்க்க படும். அதுவும் தமிழக கவர்னர் ஒரு தலையாக செயல்படுவதாக தமிழக போராளிகள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அவருடன் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். அவர் என்ன பேசினார் என்பது தெரியாதவரை, பேசியவர் தான் அவருடன் அரசியல் பேசினேன் என்பதில் என்ன தவறு. தமிழகத்தில் சாதி, மொழி, மத வன்மம் பிடித்த சிலர் தன்னை விட அதிகமாக ஒருவரை மக்கள் மதித்தால் அவரை ஒருமையில் 'அவன் இவன்' என்று பேசுவது பிறவி குணமாக இருக்கிறது.மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் தெறியாதவர்கள்....
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
08-ஆக-202216:41:44 IST Report Abuse
Priyan Vadanad தப்பு செய்தபின் குரலெழுப்புவதை விட தப்பு செய்யுமுன்னால் எச்சரிக்கை குரலெழுப்பி, திமுக அரசுக்கு அண்ணாமலை நல்லது செய்து வருகிறார். நன்றி.
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
08-ஆக-202215:58:53 IST Report Abuse
சாண்டில்யன் இலவசங்களால் இந்தியா இன்னொரு இளங்காயாகிவிடும்னு மிரட்டுகிறார்கள் ரேஷன் அரிசி மின்சாரம் சலுகை விலையில்கூட தரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் தாரக மந்திரமாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X